துப்பாக்கி முனையில் 300 பள்ளி மாணவர்களை கடத்தியது கும்பல்... பரபரப்பு

நைஜீரியாவில் 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களை துப்பாக்கி ஏந்திய 50 பேர் கொண்ட தீவிரவாத கும்பல் கடத்திச் சென்றது பெற்றோர்களை கலங்க வைத்துள்ளது.

Mar 9, 2024 - 17:57
துப்பாக்கி முனையில் 300 பள்ளி மாணவர்களை கடத்தியது கும்பல்... பரபரப்பு

நைஜீரியாவில் 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களை துப்பாக்கி ஏந்திய 50 பேர் கொண்ட தீவிரவாத கும்பல் கடத்திச் சென்றது பெற்றோர்களை கலங்க வைத்துள்ளது.

நைஜீரியா நாட்டின் வடக்கு கண்டுனா மகாணாத்தில் உள்ள பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. (மார்ச் 8) நேற்று துப்பாக்கி ஏந்திய 50 பேர் கொண்ட கும்பல் பைக், கார் என்று பள்ளியை முற்றுகையிட்டு வானத்தை நோக்கி சுட்டனர். துப்பாக்கி சத்தம் கேட்டவுடன் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த மாணவர்கள் பயத்தில் நடுங்கினர். மாணவர்கள் அனைவரையும் வாகனங்களில் ஏற்றினார்கள். பிறகு அந்தப் பள்ளியைச் சுற்றியுள்ள நிறுத்தப்பட்டிருந்த கார், பைக் மற்றும் பள்ளிக்குள் இருந்த பொருட்களை தீவைத்து கொளுத்திவிட்டு கிளம்பினார்கள்.

அந்தப் பள்ளியில் படித்த மாணவர்கள் 7 முதல் 15 வயதுடையவர்களாக இருப்பார்கள் என்று மாணவர்களின் பெற்றோர்கள் கதறி அழுதபடி கூறுகிறார்கள். அந்த நாட்டு பிரதமர் போலா டிநுபு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரிகளை, மாணவர்களை மீட்டு வர உத்தரவிட்டுள்ளார். இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் நாங்கள் செய்தோம் என்று ஒப்புக்கொள்ளவில்லை. அதனால், இது பணத்துக்காக கடத்தும் கும்பலாக இருக்கும் என்று அதிகாரிகள் சந்தேகப்படுகிறார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow