தமிழக மீனவர்களை கண்டித்து இந்திய தூதரகம் முற்றுகை... யாழ்ப்பாணத்தில் பரபரப்பு...
தமிழக மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட சென்ற இலங்கை மீனவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக விசைப்படகு மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடிப்பதாக புகார் தெரிவித்து, யாழ்ப்பாணம் மாவட்ட கடல் பகுதிகளில் இலங்கை மீனவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக யாழ்ப்பாண மீனவர்கள் சம்மேளனம் நேற்று (மார்ச் 19) உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.
இந்த நிலையில் உணவு தவிர்ப்பு போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக வருகை தந்த மாதகல் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுடன் இணைந்து பேரணியாக யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரகத்தின் முன்பாக சென்று முற்றுகை போராட்டத்தை நடத்த முற்பட்டனர்.
இதன் காரணமாக போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதால் போராட்டக்காரர்கள் அங்கிருந்து சென்றனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபடும் மீனவர்களுக்கு நேரில் சென்று மாதகல் மீனவர்கள் தங்களது ஆதரவை தெரிவித்தனர். இதையடுத்து யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
What's Your Reaction?