BJP வின் சாம்ராஜியத்தை உடைத்த PK .....பீகாரில் அதிரடி வெற்றி....!

பாஜகவின் ரெக்கார்டுடை உடைத்து பிகார் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பங்கிப்பூர் தொகுதியில் ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரஷாந்த் கிஷோர் வெற்றி பெற்றுள்ளார்.

Aug 3, 2026 - 17:04
Aug 3, 2026 - 17:09
BJP வின் சாம்ராஜியத்தை உடைத்த PK .....பீகாரில் அதிரடி வெற்றி....!

குஜராத்தின் மஞ்சள்பூர், மத்திய பிரதேசத்தின் ததியா, பிகாரின் பங்கிப்பூர் ஆகிய தொகுதிகளுக்கு கடந்த ஜூலை 30 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதில் பிகார் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பாஜக தான் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த நிலையில் தற்போது பங்கிப்பூர் தொகுதியில் போட்டியிட்ட ஜன் சுராஜ் கட்சியின் தலைவரும் அரசியல் வியூக நிபுணருமான பிரஷாந்த் கிஷோர், வாக்கு எண்ணிக்கையின்  தொடக்கம் முதலே முன்னிலை வகுத்து வந்த நிலையில்  எண்ண வேண்டிய வாக்குகளை விட அதிக வாக்குகள்  பெற்று தற்போது வெற்றி பெற்றுள்ளார்.

இந்திய தேர்தல் ஆணைய இணையதளத்தின்படி மொத்தமுள்ள 31 சுற்றுகளில் 24வது சுற்று முடிவில் பாஜக வேட்பாளர் நீரஜ் குமாரைவிட 13,868 வாக்குகள் வித்தியாசத்தில் பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். பிகாரில் தொடர்ந்து  தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அந்த ரெக்கார்டை உடைத்து இந்த இடைத் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றுள்ளது பாஜக மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பங்கிப்பூர் தொகுதி பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன் தொகுதியாக உள்ள நிலையில் நிதின் நவீன் மாநிலங்களவை உறுப்பினராக ஆவதற்கு தனது பங்கிப்பூர் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில் அதன் விளைவாக தான் நடைபெற்ற இடைத்தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்ட பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலமாக பிகாரில் பிரசாந்த் கிஷோர் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுமார் 31 ஆண்டுகளாக பாஜகவின் கோட்டையாக இருந்த பங்கிப்பூர் நிதின் நவீனுக்கு முன்னதாக அவரது தந்தை நவீன் கிஷோர் பிரசாத் சின்ஹாவின் தொகுதியாக இருந்துள்ளது. பாஜகவின் ராஜியத்தை தற்போது பிரசாந்த் கிஷோர் கைப்பற்றியுள்ளதால் இது அவருக்கு மிகப் பெரிய வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இனிவரும் தேர்தல்களில் பிகார் அரசியல் சூழ்நிலையை மாற்றக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதேபோல கடந்த பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று பிகார் முதலமைச்சராக நிதீஷ் குமார் இருந்தார். மாநிலங்களவை உறுப்பினராக அவர் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியதன் எதிரொலியாகவும் இந்த இடைத்தேர்தல் முடிவு பார்க்கப்படுகிறது.

மேலும் பங்கிப்பூர் தொகுதியில் மிகவும் குறைவாக 34% வாக்கு சதவீதமே பதிவானது குறிப்பிடத்தக்கது. குஜராத்தின் மஞ்சள்பூர் தொகுதி இடைதேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. மத்திய பிரதேசத்தின் ததியா தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow