நகைப்பிரியர்களுக்கு ஷாக் ! தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு !

தங்கம் விலையில் மீண்டும் அதிரடி மாற்றம்... நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்!

Sep 19, 2026 - 11:00
நகைப்பிரியர்களுக்கு ஷாக் ! தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு !
Today Gold Rate Update !

சென்னையில் இன்று (செப்டம்பர் 19) ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்வை சந்தித்துள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை, இன்று திடீரென அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களில் தங்கம் விலை மாற்றம் :

தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து மாற்றங்களை சந்தித்து வருகிறது. கடந்த 12-ம் தேதி சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.1,13,360-க்கும், ஒரு கிராம் ரூ.14,170-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 13-ம் தேதி விலையில் பெரிய மாற்றம் இல்லாமல் அதே விலையில் நீடித்தது. 14-ம் தேதி சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.1,13,000 ஆகவும், ஒரு கிராம் ரூ.14,125 ஆகவும் இருந்தது.

15-ம் தேதி மேலும் சரிவு ஏற்பட்டு, சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.1,12,320-க்கும், ஒரு கிராம் ரூ.14,040-க்கும் விற்பனையானது.

16-ம் தேதி மீண்டும் சிறிய உயர்வு பதிவாகி, சவரன் ரூ.1,12,520-க்கும், ஒரு கிராம் ரூ.14,065-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 17-ம் தேதி சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.1,12,080 ஆகவும், ஒரு கிராம் ரூ.14,010 ஆகவும் இருந்தது.

நேற்று தங்கம் விலையில் திடீர் உயர்வு காணப்பட்ட நிலையில், சவரனுக்கு ரூ.1,160 அதிகரித்து ரூ.1,13,240-க்கும், ஒரு கிராம் ரூ.14,155-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

22 கேரட் தங்கம் விலை நிலவரம் :

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து ரூ.1,14,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.130 அதிகரித்து ரூ.14,285 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி விலையிலும் உயர்வு :

தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையிலும் இன்று உயர்வு ஏற்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.5 அதிகரித்து ரூ.260-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.2 லட்சத்து 60 ஆயிரமாக உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow