"ஒவ்வொரு தொழில்நுட்பத்திலும் இந்தியா சாதனை" - பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
ஒவ்வொரு புதிய தொழில்நுட்பத்திலும் இந்தியா சாதனை படைத்து வருகிறது என 51 ஆயிரம் பேருக்கு பணியானை வழங்கி பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு புதிய தொழில்நுட்பத்திலும் இந்தியா சாதனை படைத்து வருகிறது என 51 ஆயிரம் பேருக்கு பணியானை வழங்கி பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உள்துறை, பாதுகாப்பு உள்ளிட்ட மத்திய அமைச்சகங்களில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்காக ரோஜ்கர் மேளா என்ற வேலைவாய்ப்புத் திருவிழாவை அறிமுகப்படுத்துவதாக மத்திய அரசு முன்னதாக அறிவித்தது.
அதன் ஒரு பகுதியாக விசாகப்பட்டினம் உள்ளிட்டு நாடு முழுவதும் 40 இடங்களில் நடைபெற்ற ரோஜ்கர் மேளா நிகழ்வில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்றார். தொடர்ந்து 51 ஆயிரம் பேருக்கான பணி நியமன ஆணையை பிரதமர் மோடி வழங்கினார்.
இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய அவர், மத்திய அரசில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு நிரந்தரப்பணி வழங்கும் நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருவதாகக் கூறினார்.
முந்தைய அரசின் பழமைவாய்ந்த சிந்தனைகளில் இருந்து நாட்டை விடுவிக்கும் பணியை முன்னெடுத்து வருவதாகவும், இதனால் ஒவ்வொரு புதிய தொழில்நுட்பத்திலும் இந்தியா சாதனை படைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். கைவினைஞர்கள், நெசவாளர்கள் மற்றும் வணிகர்கள் உள்ளிட்டோரின் வாழ்வாதாரம் முன்னேறி வருவதாகவும் அவர் கூறினார்.
What's Your Reaction?