சென்னையில் மதியம் வரை மழை-மக்களுக்கு அலர்ட் விடுத்த வானிலை மையம்

சென்னையில் இன்று(நவ.12) மதியம் வரை 1 மணி வரை திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Nov 12, 2024 - 10:51
சென்னையில் மதியம் வரை மழை-மக்களுக்கு அலர்ட் விடுத்த வானிலை மையம்

சென்னை உட்பட 6 மாவட்டங்களில் இன்று (நவ.12) மதியம் 1 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக சென்னையில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழகம் நோக்கி நகர்வதால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.இந்த நிலையில், தொடர் மழை காரணமாக சென்னையில் இருந்து டெல்லி, மும்பை செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் 30 முதல் 45 நிமிடங்கள் வரை தாமதாகவும், ஐதராபாத் செல்லும் இண்டிகோ விமானம் 30 முதல் 35 நிமிடங்கள் தாமதமாகவும் இயக்கப்படுகிறது.

மழை காரணமாக சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ( நவ.12) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில், தமிழகத்தில் இன்று(நவ.12) மதியம் வரை 1 மணி வரை திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் சென்னையில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருவதால் கீழ்ப்பாக்கம் பிளவர்ஸ் சாலை, மில்லர்ஸ் சாலை, எழும்பூர் பாந்தியன் சாலை, எத்திராஜ் சாலை ஆகிய முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்து செல்கிறது.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow