அதிரடியாக ரூ.1080 குறைந்த தங்கம் விலை - மளமளவென விலை குறைந்தால் மக்கள் மகிழ்ச்சி

சென்னையில் இன்று (நவ.12) தங்கம் விலை சவரனுக்கு ரூ.1080 குறைந்துள்ளது.

Nov 12, 2024 - 10:27
அதிரடியாக ரூ.1080 குறைந்த தங்கம் விலை - மளமளவென விலை குறைந்தால் மக்கள் மகிழ்ச்சி

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1080 குறைந்து விற்கப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.1080 குறைந்து ரூ.56,680க்கும், கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.7,085க்கும் விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த 12 நாட்களில் ரூ.2,960 குறைந்துள்ளது. 

சென்னையில் நேற்று (நவ.11ம் தேதி) சவரனுக்கு ரூ.440 குறைந்து விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.1080 குறைந்து விற்கப்படுகிறது.சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க லாருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. 

இதைத்தொடர்ந்து தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 23ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால் அன்றைய தினம் சவரனுக்கு ரூ.2080 குறைந்தது. பின்னர் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்தது. குறிப்பாக தீபாவளி அன்று (அக்.31)ரூ.59,640 என்ற வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது.

இந்த நிலையில், தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிந்து வருகிறது. குறிப்பாக இன்று (நவ.12) தங்கம் விலை சவரனுக்கு ரூ.1080 குறைந்துள்ளது. இதனால் தங்கத்தை வாங்க நினைக்கும் மக்கள் இப்போதே வாங்கி சேமித்து வைத்துக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow