”இபிஎஸ் கனவு உலகத்தில் வாழ்கிறாரா?” - முதலமைச்சர் கொடுத்த பதிலடி
எதிர் கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கனவு உலகில் இருக்கிறா எனத் தெரியவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
எதிர் கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கனவு உலகில் இருக்கிறா எனத் தெரியவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் 810 கோடி ரூபாயில் முடிவுற்ற திட்ட பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, பொம்மை குட்டைமேட்டில் பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் பேசிய அவர், கடந்த சில நாட்களாக, மூன்றாண்டுகளாக தமது ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், நிறைவேற்றப்பட்டுள்ள பணிகள், நடைபெற்று வரும் பணிகள் குறித்து துறைவாரியாக ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருவதாகவும், வருகிற நவம்பர் மாதம் முதல், எல்லா மாவட்டங்களிலும் நடைபெற்று வரும் பணிகளை நேரடியாக கள ஆய்வு செய்யப் போவதாகவும் தெரிவித்தார்.
மேலும், எடப்பாடி பழனிசாமி இந்த உலகத்தில் இருக்கிறாரா அல்லது கனவு உலகத்தில் இருக்கிறாரா என தெரியவில்லை எனவும், அவரின் பேச்சை காமெடி போல நினைத்து கொள்ள போகிறார்கள் எனவும், அதிமுகவின் கோட்டை என்று சொல்லப்படும் மேற்கு மாவட்டங்களிலேயே நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிதான் அதிக இடங்களை கைப்பற்றியதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
திமுக ஆட்சியின் மதிப்பு சரியவில்லை எனவும் அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் மதிப்பையே எடப்பாடி பழனிசாமி அடமானம் வைத்ததாகவும் குற்றஞ்சாட்டினார். ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே எடப்பாடி பழனிசாமி கவனம் செலுத்தியதால், அதிமுகவின் செல்வாக்கும் சரிந்துவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார்.
முன்னதாக, செலம்ப கவுண்டர் பூங்கா அருகே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின், 8 அடி உயர வெண்கல திருவுருவ சிலையை, திறந்து வைத்து பார்வையிட்டார்.
What's Your Reaction?