வேற இடத்துக்கு வேலைக்கு போவியா?... வடமாநில ஊழியருக்கு நேர்ந்த கதி...

சென்னை வியாசர்பாடி அருகே, வடமாநில தொழிலாளரை, கான்ட்ராக்டர் ஒருவர் தாக்கும் சிசிடிவி காட்சிகளுடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Apr 3, 2024 - 13:56
வேற இடத்துக்கு வேலைக்கு போவியா?... வடமாநில ஊழியருக்கு நேர்ந்த கதி...

வியாசர்பாடி அருகேயுள்ள கொருக்குப்பேட்டையில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில், ஒப்பந்த அடிப்படையில் வடமாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், 10க்கும் மேற்பட்ட வடமாநில ஊழியர்கள், வியாசர்பாடி காவல்நிலையத்துக்கு சென்று, முகேஷ்குமார் என்ற வடமாநில இளைஞரை ஒப்பந்ததாரர் சார்லஸ் தனது சகோதரர் ஆக்னஸ் மற்றும் கூட்டாளிகளுடன் வந்து சரமாரியாக தாக்கியதாக புகார் அளித்தனர்.  

புகாரில், ஒப்பந்ததாரர் சார்லஸ் தனது கூட்டாளிகளுடன் முகேஷ் குமார் தங்கியுள்ள இடத்தில் அத்துமீறி நுழைந்து, அவர் வேறு இடத்திற்கு வேலைக்கு செல்லக்கூடாது எனக்கூறி, ஆபாசமான வார்த்தைகளால் திட்டிவிட்டு கடுமையாக தாக்கியதாக, முகேஷ் குமார் தெரிவித்துள்ளார். 

மேலும், நீ எனக்கு கொத்தடிமை தான் எனக்கூறி, அவர்கள் மிரட்டிவிட்டு சென்றதாகவும் கூறியுள்ள முகேஷ், அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் மற்றும் வாட்ஸ் ஆப் ஆடியோவையும் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஒப்பந்ததாரர் சார்லஸ் மற்றும் அவரது சகோதரர் ஆக்னஸ் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow