ஜனநாயக தேர்தலை அறிமுகப்படுத்தியவர் ராஜராஜ சோழன் - அமைச்சர் கோவி. செழியன் புகழாரம்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகில் முதல் முதலாக ஜனநாயக ரீதியில் தேர்தலை நடத்தியது ராஜ ராஜ சோழன். இதற்கு உத்திரமேரூர் கல்வெட்டு சான்று என தெரிவித்தார்.
உலகில் முதல் முதலாக 1000 ஆண்டுகளுக்கு முன்பு ஜனநாயக முறையில் தேர்தலை அறிமுகப்படுத்தியவர் மாமன்னன் ராஜராஜ சோழன் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர், கும்பகோணம் அருகே பம்பப்படையூரில் ராஜராஜ சோழன் வரலாற்று ஆய்வு மற்றும் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற ராஜராஜ சோழன் சதய விழா நிகழ்ச்சி சோழர்களின் தலைநகரம் பழையயாறை அருகே பம்பை படையூரில் ராஜராஜ சோழனின் 1039வது சதய விழா ராஜராஜன் வரலாற்று ஆய்வு மற்றும் பண்பாட்டு மையம் சார்பில் இன்று நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், நாடாளுமன்ற உறுப்பினர் கல்யாண சுந்தரம், நடிகர் ராஜேஷ் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் வரலாற்று ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகில் முதல் முதலாக ஜனநாயக ரீதியில் தேர்தலை நடத்தியது ராஜ ராஜ சோழன். இதற்கு உத்திரமேரூர் கல்வெட்டு சான்று என தெரிவித்தார்.
மேலும், ராஜராஜ சோழன் வாழ்ந்த பம்ப படையூரில் இந்த விழா நடைபெறுவது ஆகச் சிறந்தது என்றும் இந்த விழா தொடர்ந்து நடைபெற வேண்டும் எனவும் கோவி. செழியன் தெரிவித்தார்.மேலும், ராஜராஜ சோழனின் 1039வது சதய விழாவினை முன்னிட்டு கும்பகோணம் ஓவியக் கல்லூரி மாணவ, மாணவியர்கள் ராஜராஜசோழன் தொடர்பான ஓவிய கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் சிறப்பாக வரையப்பட்ட ஓவியங்களுக்கு அமைச்சர் கோவி.செழியன் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.ராஜராஜ சோழனின் 1039வது சதய விழாவால் தஞ்சாவூர் விழா கோலம் பூண்டுள்ளது
What's Your Reaction?