தொடர் கைது - மீனவர்களின் உறவினர்கள் சாலை மறியல்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்ததை கண்டித்து தங்கச்சிமடம் பகுதியில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்ததை கண்டித்து தங்கச்சிமடம் பகுதியில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து 2 விசைப்படகுகளில் 15 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவுக்கும் மன்னார் பகுதிக்கும் இடையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை, தலைமன்னார் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 17 மீனவர்களையும், 2 விசைப்படகையும் விடுவிக்கக்கோரி
கைதான மீனவர்களின் உறவினர்கள் தங்கச்சிமடம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?