இறங்கி அடிக்கும் அமைச்சர்... அடக்க நினைக்கும் அறிவாலயம்..!
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரான ராஜ்மோகன் திமுகவை சீண்டிக் கொண்டே இருப்பதால், அவரை அடக்க பலே பிளான் போட்டு வருகிறதாம் அறிவாலயம் என்கின்றனர் உள்விவரம் அறிந்தவர்கள்.
இதுகுறித்து அறிவாலய வட்டாரங்களில் விசாரித்த போது.. அமைச்சர் ராஜ்மோகன், தன் பேச்சுத் திறமைக் கொண்டு எதிர்க்கட்சியினரை திணறடித்துவிடலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவரை எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஒரே ஒரு வரியால் மொக்கை செய்தது தரமான சம்பவம். சபாநாயகர் பேசி முடிந்ததும் அவை முடிந்தது என்று சொன்னதும் சின்னவர் கிளம்பிவிட்டார், ஆனால் அவருக்கு பதிலடி கொடுக்கிறேன் என்ற பேரில் அமைச்சர் மட்டும் தனியாக ஸ்டாண்ட் அப் காமெடி பண்ணிக் கொண்டிருந்தார். இதைத்தான் எங்கள் தலைவர் சட்டமன்றத்தில் அடுத்த நாள் டிவி பார்த்து தெரிந்துக் கொண்டேன் என்று நோஸ்கட் செய்தார். சட்டமன்ற உறுப்பினராக, விளையாட்டுத்துறை அமைச்சராக, துணை முதலமைச்சராக இருந்தவருக்கு தெரியாதா அவையின் மாண்பை காப்பாற்ற? ராஜ்மோகன் யார்? அவருக்கு என்ன தகுதி இருக்கிறது உதயநிதிக்கு அட்வைஸ் செய்ய? அதுமட்டுமா, திமுக மீது வன்மைத்தை கொட்டிக் கொண்டிருக்கிறார் அந்த அமைச்சர் என்று அறிவாலயத் தொண்டர்கள் ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், சட்டமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் திமு.க. தரப்பை ஓவராகவே அட்டாக் செய்கிறார் என்பதாலும், குறிப்பாக, கல்வித்துறையில் கடந்த ஆட்சியில் லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரங்கள் அவரது முன்னெடுப்பால்தான் வெளியாகின என்று கூறப்படுவதாலும் அவருக்கு எதிராக அறிவாலய ஐடி விங் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சரின் குற்றச்சாட்டுகளுக்கு ஐடி விங் சார்பாக பதிலடி தரப்பட்டாலும், திமுக தலைமை அவர்மீது கடும் காட்டத்துடன் இருக்கிறதாம். இதையடுத்து, அடுத்து வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் ராஜ்மோகனின் துள்ளலை அடக்க, சரியான வியூகத்தோடு களமிறங்க வேண்டும் என மூத்த மாஜிக்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், சிலபல அதிகாரிகளை வேவு பார்க்கவிட்டு, கல்வித்துறையில் ஏதேனும் குளறுபடிகள் நடக்கின்றனவா என்பது குறித்தும் கண்களில் விளக்கெண்ணை ஊற்றிக்கொண்டு கண்காணிக்கிறது திமுக தரப்பு என்றும் உள்விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
What's Your Reaction?