ஆங்கில வெப் சீரிஸின் தழுவலா ‘தர்மன்’? விளக்கம் கொடுத்த அஷ்வத் மாரிமுத்து..!

ஆங்கில வெப் சீரிஸான தி குட் டாக்டர் தழுவல் தான் ‘தர்மன்’ திரைப்படம் என்ற் இணையத்தில் ஒரு தகவல் வைரலான நிலையில், அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து. 

ஆங்கில வெப் சீரிஸின் தழுவலா ‘தர்மன்’? விளக்கம் கொடுத்த அஷ்வத் மாரிமுத்து..!

டிராகன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, உலக நாயகன் கமல் தயாரிக்க, சூப்பர் ஸ்டார் ரஜினியின் 173 ஆவது படத்தை இயக்குகிறார் அஷ்வத் மாரிமுத்து. ’தர்மன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, ஒரு Investigative Thriller-ஆக இப்படம் உருவாக உள்ளது. இப்படத்தின் போஸ்டரில், தலைவர் ரஜினிகாந்த் ‘டாக்டர்’ கெட்டப்பில் செம்ம மாஸா… கிளாஸாக இருக்கிறார். பேட்ட படத்திற்கு பிறகு ரஜினியுடன் மீண்டும் சிம்ரன் இணைகிறார். இவர்களுடன் ராஷி கண்ணாவும் நடிக்கிறார்.

 “தர்மன் படத்தின் படப்பிடிப்பு நாளை (ஜூன் 25) தொடங்குகிறது. படையப்பா - வேட்டையாடு விளையாடு படங்களின் கலவையாக தர்மன் படம் இருக்கும்" என இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

படத்தின் டேக்லைனாக இடம்பெற்றுள்ள 'The Deadly Doctor' என்ற வாசகம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இதைத் தொடர்ந்து, நேற்று தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட புதிய போஸ்டரிலும், ரஜினிகாந்தின் 'முள்ளும் மலரும்' திரைப்படத்தில் இடம்பெற்ற பிரபலமான "கெட்ட பையன் சார்" என்ற வசனத்தை கேப்ஷனாக பயன்படுத்தியிருந்தது. இதுவும் படத்தின் கதை குறித்த ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது.

இந்த நிலையில், சமூக வலைதளமான X-ல் ஒருவர், 'தர்மன்' திரைப்படம் Netflix-ல் வெளியான The Good Doctor தொடரைத் தழுவி உருவாகிறது என்றும், அதன் ரீமேக் உரிமையை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் பெற்றுள்ளதாகவும் பதிவிட்டார். மேலும், தனக்கு மிகவும் பிடித்த தொடரான இதை, ரஜினிகாந்தை மையமாக வைத்து எவ்வாறு திரைக்கதையாக மாற்றப் போகிறார்கள் என்பதை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த செய்தி தீயாக பரவ, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிவிட்டது. Netflix-ல் வெளியான The Good Doctor தொடர், சவான்ட் சிண்ட்ரோம் (Savant Syndrome) மற்றும் ஆட்டிசம் கொண்ட திறமையான இளம் அறுவை சிகிச்சை மருத்துவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது. சிறிய கிராமத்தில் இருந்து புகழ்பெற்ற மருத்துவமனையில் பணியாற்ற வரும் அவர், சக மருத்துவர்களுடன் பழகுவதில் சிரமங்களை எதிர்கொண்டாலும், தனது அசாதாரண மருத்துவத் திறமை மற்றும் கூர்மையான உள்ளுணர்வின் மூலம் பலரது உயிரைக் காப்பாற்றி அவர்களின் நம்பிக்கையைப் பெறுகிறார். ஏழு சீசன்கள் கொண்ட இந்தத் தொடரில் ஃப்ரெடி ஹைமோர், ஹில் ஹார்பர், ரிச்சர்ட் ஷிஃப், கிறிஸ்டினா சாங், பேஜ் ஸ்பாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இந்தத் தொடரைத் தழுவியே 'தர்மன்' திரைப்படம் உருவாகிறது என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், அந்த பதிவுக்கு இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து நேரடியாக பதிலளித்துள்ளார். அந்த பதிவை Quote Tweet செய்த அவர், "Fake News!" என்று ஒரே வார்த்தையில் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதன் மூலம், 'தர்மன்' திரைப்படம் The Good Doctor தொடரின் ரீமேக் அல்ல என்பது தெளிவாகியுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow