"இராமாயனா : பாகம் 1" உலகம் முழுவதும் நவமபர் 6-ல் வெளியீடு
இந்துக்களின் முக்கிய இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு, நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர் இராமராகவும், யாஷ் இராவணனாகவும் , சாய் பல்லவி சீதையாகவும், ரகுல் ப்ரீத் சிங் சூர்பனகையாகவும் நடித்துள்ளப் படம் ராமாயணா. இந்த படத்தின் முதல் பாகம் நவம்பர் மாதம் 6-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

இந்தியாவில் ராமாயணம் என்ற புராணத்துக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறார். வால்மீகி எழுதியதை தமிழில் கம்பரும் எழுதியிருக்கிறார். சீதையை ராவணன் கடத்திக்கொண்டு சென்றுவிட; அவரிடமிருந்து சீதையை ராமன் மீட்பதுதான் கதை. பல பல வருடங்களாக பல தலைமுறையினர் கேட்டு கேட்டு வளர்ந்த கதை இது. சின்னத்திரைகளிலும், மேடைகளிலும் பலமுறை நாடகங்களாகவும் வந்திருக்கிறது.
நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் தீபாவளி பண்டிகை 8-ஆம் தேதி என்றால் படம் 6 -ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது. தமிழ் டிரெய்லர் ஜூலை.30 அன்று பிரம்மமுகூர்த்தத்தில் 4.15 மணிக்கு வெளியிடப்பட்டது. படத்தில் ரவி துபே, சன்னி தியோல், அருண் கோவில், லாரா தத்தா, குணால் கபூர், சோபனா ஆகியோரும் நடித்துள்ளனர்.
பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ், மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படத்திற்குஆஸ்கார் நாயகர்கள் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் ஆகியோர் இசையமைத்துள்ளனர். இசை ரசிகர்களுக்கும், படக்குழுவுக்கும் இது மிகப்பெரிய ப்ளஸ் ஆக பார்க்கப்படுவதாக சினிமா ஆர்வலர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி ஹாலிவுட் நிறுவனமான "சோனி பிக்சர்ஸ் என்டெர்டெய்ன்மென்ட்" இந்த படத்துடன் கைகோர்த்து உலகம் முழுவதும் வெளியிட ஒப்பந்தம் செய்துள்ளதால் உலகத்தில் இராமாயணம் கதையை தெரிந்த அணைத்து ரசிகர்களுக்கு இந்த படம் சிறந்த அனுபவமாக அமையும்.
What's Your Reaction?