Aranmanai 4 Box office: பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் அரண்மனை 4… இத்தனை கோடி வசூலா..?
சுந்தர் சி இயக்கியுள்ள அரண்மனை 4 திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் இந்தப் படத்தின் 5 நாட்கள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 படத்துக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸான இந்தப் படத்தை ரசிகர்கள் சம்மர் ட்ரீட்டாக கொண்டாடி வருகின்றனர். தமன்னா, ராஷி கண்ணா, சந்தோஷ் பிரதாப், யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். அரண்மனை சீரிஸில் இதுவரை வெளியான 3 பாகங்களில் ஃபர்ஸ்ட் பார்ட் மட்டுமே சூப்பர் ஹிட் அடித்தது. அதனையடுத்து ரிலீஸான அரண்மனை 2வது, 3வது பாகங்கள் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.
இதனால் அரண்மனை 4 ரிலீஸாகும் வரை ரசிகர்கள் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், முதல் ஷோவுக்குப் பின்னர் அரண்மனை 4ம் பாகத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்தன. இதனால் வார இறுதி நாட்களான சனி, ஞாயிறுகளில் அரண்மனை 4 படத்துக்கான டிக்கெட் புக்கிங் அமோகமாக இருந்தன. இதனையடுத்து பல திரையரங்குகளில் அரண்மனை 4 படத்துக்கு ஸ்க்ரீன்கள் அதிகப்படுத்தியதால், பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் வேட்டை நடத்தியது.
முதல் நாளில் 7 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்த அரண்மனை 4, அடுத்தடுத்து நாட்களில் ருத்ரதாண்டவம் ஆடியுள்ளது. அதன்படி 5 நாட்கள் முடிவில் உலகம் முழுவதும் 50 கோடிக்கும் அதிகமாக கலெக்ஷன் செய்துள்ளதாம் அரண்மனை 4. இது திரையரங்க உரிமையாளர்களே எதிர்பார்க்காத தரமான வசூல் என சொல்லப்படுகிறது. இந்தாண்டு ஆரம்பம் முதலே தமிழில் வெளியான படங்கள் எதுவும் பெரியளவில் சக்சஸ் ஆகவில்லை. தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயன் நடித்த அயலான், ரஜினி கேமியோவாக நடித்த லால் சலாம் படங்கள் அதிக ஹைப் உடன் வெளியாகி மொக்கை வாங்கின.
ஆனால், மினிமம் பட்ஜெட்டில் எந்தவித ஆர்பாட்டமும் இல்லாமல் ரிலீஸான அரண்மனை 4, கோலிவுட் பாக்ஸ் ஆபிஸையை மிரள வைத்துள்ளது. நாளை மறுநாள் கவின் நடித்துள்ள ஸ்டார் வெளியாகிறது. அதன் பின்னர் அரண்மனை 4 படத்தின் வசூல் நிலவரம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதேநேரம் அரண்மனை 4க்கு ஃபேமிலி ஆடியன்ஸிடம் நல்ல வரவேற்பு இருப்பதால், இந்தப் படம் 100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?