ரேஷன் கார்டுக்கு நாளை முதல் ஆப்பு? 6 மாதமாக பயன்படுத்தலையா... அடுத்தது இதுதான்!

தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான குடும்பங்களின் அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடைய ரேஷன் கார்டுகள் குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

Sep 30, 2026 - 14:45
ரேஷன் கார்டுக்கு நாளை முதல் ஆப்பு? 6 மாதமாக பயன்படுத்தலையா... அடுத்தது இதுதான்!

ரேஷன் கார்டு என்றாலே அரிசி, சர்க்கரை, பருப்பு வாங்குவதற்கான அட்டை என்ற நிலை இப்போது இல்லை. தமிழ்நாட்டில் பல்வேறு அரசு நலத்திட்டங்களுக்கும் குடும்ப அட்டை முக்கிய ஆவணமாகப் பயன்படுத்தப்படுகிறது. பொங்கல் பரிசுத் தொகுப்பு முதல் மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுடன் குடும்ப அட்டை இணைக்கப்பட்டுள்ளது. இதனால், ரேஷன் கார்டில் பெயர் இருக்கிறதா என்பதும், அது தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளதா என்பதும் பல குடும்பங்களுக்கு முக்கியமான விஷயமாக உள்ளது.

6 மாதம்... கணக்கில் வரும்!

தற்போது நாடு முழுவதும் ரேஷன் அட்டைகளின் விவரங்களைத் துல்லியப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நீண்ட காலமாக பயன்படுத்தப்படாத குடும்ப அட்டைகளும் கணக்கில் எடுக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, தொடர்ந்து 6 மாதங்களுக்கும் மேலாக ரேஷன் கடையில் பொருட்கள் வாங்காமல் இருக்கும் கார்டுகளை முடக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் எனக் கூறப்படுகிறது.

இதோடு, குடும்பத்தில் இறந்தவர்களின் பெயர்கள் தொடர்ந்து இடம்பெற்றிருப்பது, ஒரே நபர் அல்லது குடும்பத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் இருப்பது, இடம்பெயர்ந்த பிறகும் பழைய குடும்ப அட்டை பயன்பாட்டில் இருப்பது போன்ற விவரங்களும் சரிபார்க்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

போலி கார்டுகளுக்கு செக்!

ரேஷன் பொருட்கள் உண்மையான பயனாளிகளுக்குச் சென்றடைவதை உறுதி செய்வதற்காக குடும்ப அட்டைகளின் தரவுகளைச் சரிபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் தகுதியற்ற அல்லது போலியாகக் கருதப்படும் குடும்ப அட்டைகளை கண்டறிந்து நீக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திடீரென கார்டு முடங்கிவிட்டால்?

இங்குதான் பொதுமக்களுக்கு முக்கியமான கேள்வி வருகிறது. ஏதேனும் காரணத்தால் ரேஷன் கார்டு தவறுதலாக முடக்கப்பட்டால் என்ன செய்வது? அதற்காக e-KYC நடைமுறை மூலம் விவரங்களைச் சரிபார்த்து, தகுதியுள்ள குடும்ப அட்டையை மீண்டும் செயல்படுத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நீண்ட நாட்களாக ரேஷன் கடைக்குச் செல்லாமல் இருக்கும் குடும்ப அட்டைதாரர்கள் தங்களது கார்டின் நிலையை ஒருமுறை சரிபார்த்துக் கொள்வது நல்லது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow