காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த விஜேந்தர் சிங்..
பாஜக தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே முன்னிலையில் விஜேந்தர் சிங் பாஜகவில் இணைந்தார்.
2008-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்றவர் பிரபல குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங். இவர் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் டெல்லி தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டேவை சந்தித்து தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார் விஜேந்தர் சிங். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் "விளையாட்டு துறையை ஊக்குவிக்கும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பாஜக ஆட்சியில் விளையாட்டு வீரர்களுக்கான மதிப்பு அதிகரித்து உள்ளது" என கூறினார்.
உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் பாஜக நட்சத்திர வேட்பாளர் ஹேமமாலினியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்படுவார் என பேசப்பட்ட நிலையில், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் பாஜகவில் இணைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
What's Your Reaction?