Stepping stone: மாணவர்களுக்காக கைக்கோர்த்த RKG நெய் மற்றும் SICA
சமையற்கலை கல்வி மற்றும் தொழில்துறை தேவைகளை இணைக்கும் முயற்சியாக ஸ்டெப்பிங் ஸ்டோன் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வானது, அடுத்த தலைமுறை சமையல் நிபுணர்களுக்கு அத்தியாவசிய திறன்கள், தொழில்துறை நுண்ணறிவு மற்றும் தொழில்முறை மேம்பாட்டு வாய்ப்புகளை எடுத்துரைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

RKG அக்மார்க் நெய் மற்றும் தென்னிந்திய செஃப் அசோசியேஷன் சங்கம் (SICA-South India Chefs' Association) ஆகியவை இணைந்து 'ஸ்டெப்பிங்ஸ்டோன்' (Stepping stone) என்கிற நிகழ்வை நடத்தினர்.இந்த நிகழ்வில், அடுத்தத் தலைமுறை சமையற்கலை வல்லுநர்களுக்கு தேவையான துறை சார்ந்த நுண்ணறிவு, திறன்கள் மற்றும் துறை சார்ந்த வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
வளர்ந்து வரும் சமையல் தொழிற்துறையில் வெற்றிகரமான வணிகத்தை உருவாக்குவது எப்படி? சமையல் தொழிற்துறையில் வளர்ச்சி தரும் வாய்ப்புகளை எப்படி கண்டுணர்வது? தனிப்பட்ட மற்றும் தொழில்முறையில் நிதி மேலாண்மையினை எவ்வாறு கையாள்வது? தொழில் சார்ந்து தனிப்பட்ட திறன்களை எப்படி வளர்த்துக் கொள்வது? போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி ஆகிய பகுதிகளில் நடைப்பெற்ற 'ஸ்டெப்பிங் ஸ்டோன்' (Stepping stone) நிகழ்வில் 50-க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து, இறுதியாண்டு பயிலும் 1500 மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
நிகழ்வு நடைப்பெற்ற இடங்கள்:
சென்னை: தரமணியில் அமைந்துள்ள இன்ஸ்டியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட், கேட்டரிங் டெக்னாலஜி & அப்ளைடு நியூட்ரிஷன், (Institute of Hotel Management Catering Technology & Applied Nutrition) கல்லூரியில் நிகழ்வு நடைப்பெற்றது. இங்கு நடைப்பெற்ற நிகழ்வில்,17 கல்லூரிகளைச் சேர்ந்த 210-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கோவை: இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்த நிகழ்வு நடைப்பெற்றது. இதில் 17 கல்லூரிகளைச் சேர்ந்த 265-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி: எஸ்ஆர்எம் ஹோட்டல் மேலாண்மை நிறுவனத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது, இதில் 30 கல்லூரிகளைச் சேர்ந்த 715-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
மதுரை: சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரியில் நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் 24 கல்லூரிகளைச் சேர்ந்த 290-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
'ஸ்டெப்பிங் ஸ்டோன்’ நிகழ்வுக்கான முன்னெடுப்பு குறித்து RKG நிறுவனத்தின் மேனேஜிங் பார்ட்னர் G.அரவிந்த்,கூறியதாவது, ” இந்த நிகழ்வு பல அடுத்த தலைமுறை சமையல் நிபுணர்களுக்கு சிறந்த கற்றல் அனுபவத்தினை கொடுத்திருக்கும். இத்துறையில் சிறந்து விளங்கும் அனுபவமிக்க சமையல் நிபுணர்களுடன் நெட்வொர்க்கினை பலப்படுத்திக் கொள்ள ஒரு நுழைவாயிலாக மாணவர்களுக்கு இந்த நிகழ்வு அமைந்திருக்கும். மாணவர்களுக்கு நுண்ணறிவினை வழங்கிடவும், அவர்களது திறமையினை ஊக்குவிக்கவும் எங்களோடு கைக்கோர்த்த SICA-வுக்கு மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டார்.
SICA தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் தாமோதரன் கோதண்டராமன் (செஃப் தாமு), சமையல் துறையில் தங்கள் தொழில் வாய்ப்புகளை மேம்படுத்த 'ஸ்டெப்பிங்ஸ்டோன்'-இல் பங்கேற்ற அனைத்து மாணவர்களையும், பங்கேற்பாளர்களையும் பாராட்டினார். மேலும், இந்த நிகழ்வு வெற்றிகரமாக நடைப்பெறுவதற்கு SICA-வின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை குறித்து விரிவாக எடுத்துரைத்து தனது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினார்.
விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்:
இந்த நிகழ்வில் சிறந்த கல்வி நிறுவனங்கள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் என மூன்று பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டன.
மதுரை:
- சிறந்த ஹோட்டல் மேலாண்மை கல்வி நிறுவனம்: சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி
சிறந்த ஹோட்டல்: கிராண்ட் மதுரை (GRT Hotels)
சிறந்த உணவகம்: சினி சுவாய்
கோயம்புத்தூர்:
- சிறந்த ஹோட்டல் மேலாண்மை கல்வி நிறுவனம்: இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
சிறந்த ஹோட்டல்: தி ரெசிடென்சி ஹோட்டல்
சிறந்த உணவகம்: ஹரிபவனம் ஹோட்டல்கள்
திருச்சி:
- சிறந்த ஹோட்டல் மேலாண்மை கல்வி நிறுவனம்: SRM ஹோட்டல் மேலாண்மை நிறுவனம் (SRM Institute of Hotel Management)
சிறந்த ஹோட்டல்: மாரியட்டின் சங்கம் ஹோட்டல்கள் கோர்ட்யார்ட் திருச்சிராப்பள்ளி (Sangam Hotels Courtyard)
சென்னை:
- சிறந்த ஹோட்டல் மேலாண்மை கல்வி நிறுவனம்: இன்ஸ்டியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட், கேட்டரிங் டெக்னாலஜி & அப்ளைடு நியூட்ரிஷன்,தரமணி (Institute of Hotel Management Catering Technology & Applied Nutrition, Tharamani)
What's Your Reaction?






