டைனோசர் வளர்ப்பு: வருஷத்துக்கு 300 முட்டை.. கைநிறைய லாபம்- இணையத்தை கலக்கும் சேட்டன்ஸ்

ஆடு வளர்த்தால் சம்பாதிக்கலாமா? கோழி வளர்த்தால் சம்பாதிக்கலாமா? என நாம் யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் டைனோசர்ஸ் வளர்ப்பில் நல்ல லாபம் என AI தொழில்நுட்ப உதவியுடன் பட்டையை கிளப்பி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்கள் சேட்டன்ஸ்.

Mar 21, 2025 - 15:23
Mar 21, 2025 - 15:40
டைனோசர் வளர்ப்பு: வருஷத்துக்கு 300 முட்டை.. கைநிறைய லாபம்- இணையத்தை கலக்கும் சேட்டன்ஸ்
story tellers union - dinosaur farming

AI தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி புகைப்படங்கள், பாடல்கள்,வீடியோ காட்சிகள் என நாளுக்கு நாள் இணையத்தை ஆக்கிரமித்து வரும் நிலையில் வித்தியாசமான யோசனையுடன் கேரளா மாநிலம் கொச்சியை சார்ந்த ஸ்டோரி டெல்லர்ஸ் யூனியன் (Story tellers union) வெளியிட்டுள்ள வீடியோ பலரது பாராட்டினைப் பெற்று வருகிறது.

வெளியிடப்பட்டுள்ள வீடியோவிலுள்ள தகவல்களின் விவரம் பின்வருமாறு-

”பாலக்காட்டில் உள்ள தினோமுக் (Dinomukku) கிராமம், டைனோசர் வளர்ப்புக்கு புகழ்பெற்றது. இறைச்சி மற்றும் முட்டைக்காக இப்பகுதி மக்கள் டைனோஸர்களை வளர்த்து வருகிறார்கள். டைனோசர் வளர்ப்பு அதிக லாபம் தரக்கூடியது மட்டுமல்ல மிகவும் எளிதானது கூட என்கிறார் ஒரு விவசாயி. ஒரு வருஷத்துக்கு 300 முட்டை வரைக்கும் டைனோசர் வளர்ப்பின் மூலம் கிடைக்கிறது. அதனின் கழிவுகள் இயற்கை விவசாயம் மேற்கொள்ள பெரிய ஆதாரமாக உள்ளது.

தண்ணீர் மற்றும் புற்களை மட்டும் தான் தீவனமாக வழங்குகிறோம். அது கடுமையான மன அழுத்தத்தில் இருந்தால் பயங்கரமாக கத்தும். மனிதர்கள் மற்றும் மிருகங்களுக்கு இடையேயான நட்புணர்வினை காண நீங்கள் தினோமுக் வரலாம். டைனோசர் வளர்ப்பு குறித்த மேலும் தகவல் மற்றும் டைனோசர் குட்டி தேவைப்படுவோர் எங்களை அணுகவும் (Story tellers union)” என அந்த வீடியோ முடிகிறது.வெறும் 1 நிமிடம் 19 நொடிகள் மட்டுமே உள்ள இந்த வீடியோ AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு மற்றுமொரு சான்று எனலாம். இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், இதனை தயாரித்த Story tellers union தரப்பினர் மலையாள ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளனர். 

”நாங்கள் முகப்புத்தகத்தில், விற்பனைக்கு டிராகன் இறைச்சி, முட்டை என சில கமெண்ட்களை பார்த்தோம். அதிலிருந்து தான் இந்த ஐடியா கிடைத்தது. AI தொழில்நுட்ப உதவியோடு, இந்த வீடியோ தயாரித்துள்ளோம், இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் சிலர் எங்களுக்கு கால் செய்து டைனோசர் வளர்ப்பு குறித்தும் நகைச்சுவையாக விவரங்களை கேட்கிறார்கள்” என Story tellers union தரப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோவிற்கு தமிழின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் கமெண்ட் செய்து பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow