மீண்டும் மீண்டுமா.. உயரே பறக்கும் தங்கம்.. இன்று விலை எவ்வளவு தெரியுமா?

தங்கத்தின் விலை தினம் தினம் உயர்ந்து கொண்டே இருப்பது இல்லத்தரசிகளை கலக்கமடைய வைத்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஏப்ரல் 4ஆம் தேதி ஒரு சவரனுக்கு ரூ.360அதிகரித்துள்ளது. ஒரு கிராம் தங்கம் இன்று ரூ.6,545க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Apr 4, 2024 - 11:13

இந்தியாவில் தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஓராண்டு காலமாகவே தங்கம் விலை தினசரியும் உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களில் தங்கம் சவரனுக்கு இரண்டாயிரத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. 

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஏப்ரல் 03) ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.70 அதிகரித்து ரூ.6,500க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் ரூ.560 அதிகரித்து ரூ52,000 ஆக விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 04) சவரன் ரூ.360 அதிகரித்து  ரூ.52,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.45 அதிகரித்து  ரூ.6,545 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் நேற்று வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்த நிலையில் ரூ.84.00-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிலோ ரூ.84,000 ஆக விற்பனையானது. 
சென்னையில் வெள்ளி விலை கிராம்  ரூ.84.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.84,000ஆக விற்பனையாகிறது.

தங்கம் விலை அதிகரிப்புக்கு பல்வேறு காரணங்களை நகை விற்பனையாளர்கள் கூறி வருகின்றனர். சீன, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் டாலருக்கு பதிலாக தங்கத்தை வாங்கிக் குவிப்பது போன்றவற்றால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருவதால் நடுத்தர மக்களும், தங்க நகைப்பிரியர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow