ரூ.4 கோடி விவகாரம்- கேசவ விநாயகத்திடம் சிபிசிஐடி விசாரணை நிறைவு
இனிமேல் கேசவ விநாயகம் இந்த வழக்கில் ஆஜராக வேண்டிய தேவை இருக்காது என்று நான் நம்புகிறேன்
தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பணம் பிடிப்பட்ட விவகாரத்தில் பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகத்திடம் சிபிசிஐடி போலீசாரின் விசாரணை நிறைவடைந்தது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் தேர்தலுக்காக நான்கு கோடி ரூபாய் ரயில் மூலம் கொண்டு சென்றார் என்ற கோணத்திலும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அதன் அடிப்படையில் இன்று பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகத்திடம் சுமார் ஆறு மணி நேரம் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் பல்வேறு வகையான சுமார் 180க்கும் மேற்பட்ட கேள்விகள் சிபிசிஐடி போலீசார் கேசவ விநாயகத்திடம் கேட்டுள்ளனர்.
விசாரணை முடிந்து கேசவ விநாயகம் மற்றும் பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ் விசாரணை தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர், “நாடாளுமன்ற தேர்தலின் பொழுது தாம்பரம் ரயில் நிலையத்தில் மூன்று பேரிடம் 4 கோடி ரூபாய் பிடித்தது தொடர்பாக தாம்பரம் காவல் நிலையத்தில் அழைப்பு தொடரப்பட்டு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.பாஜக மாநில அமைப்புச் செயலாளர் சிபிசிஐடி மூலம் சம்மன் அனுப்பப்பட்டு ரயிலில் பிடிபட்ட 4 கோடி ரூபாய் பணத்திற்கும், அமைப்புச் செயலாளருக்கும் மற்றும் பாஜகவிற்கும் தொடர்பு இருக்கிறதா என கேட்கப்பட்டது.
அந்த பணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை பிடிபட்ட நபருக்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கூறிவிட்டார்.மீண்டும் விசாரணைக்கு சிபிசிஐடி போலீசார் மாநில அமைப்பு பொது செயலாளர் சம்மன் அனுப்பியது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். எங்களுடைய மொபைல் போனை சிபிசிஐடி போலீசார் கேட்கிறார்கள் என்பதை கூறியும் அதனை தர முடியாது என வாதிட்டோம்.மொபைல் போனில் தேர்தல் சமயத்தில் பலரிடம் பேசியிருப்பார் பல தொடர்பு எண்கள் இருக்கும். அரசியல் தொடர்பு இருக்கும் என உயர்நீதிமன்றத்தில் கூறியிருந்தோம். கேசவ விநாயகத்தை விசாரிக்க வேண்டும் என்றால் நீதிமன்றத்தில் தகுந்த ஆதாரங்களை காண்பித்த பிறகு தான் விசாரணைக்கு அழைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சிபிசிஐடி போலீசார் உச்சநீதிமன்றத்தில் சென்று வழக்கு தொடர்ந்தார்கள்.உயர்நீதிமன்றத்தில் வைத்த வாதத்தை உச்சநீதிமன்றத்தில் எங்கள் தரப்பில் வைத்தோம்.எங்களுக்கும் இந்த வழக்கிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஆளுகின்ற திமுக அரசின் காவல்துறையைச் சேர்ந்தவரகள் வேண்டுமென்றே இந்த வழக்கில் கேசவ வினாயகதத்தை சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த வழக்கில் கேசவ விநாயகத்திற்கு சம்மன் அளித்து அவருடைய பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்க வேண்டும்.கட்சிக்கும் பெயருக்கும் களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற வகையில் இந்த வாழக்கை கொண்டு செல்கிறார்கள் என்று வாதிட்டோம். வழக்கிற்கு சம்பந்தம் இல்லாமல் மொபைல் போன் கேட்கிறார்கள் என வாத்திட்டோம்.இதனை அடுத்து உச்ச நீதிமன்றம் மொபைல் போன் கொடுக்க தேவை இல்லை என கூறியிருந்தது.
மேலும் காவல் துறை உங்களை விசாரணைக்கு அழைத்தால் நீங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பதையும் கூறியிருந்தது. காவல்துறை தரப்பில் உங்களை விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்றால் ஏழு நாட்களுக்கு முன்பு சம்மன் அளித்து அழைக்க வேண்டும், என்றும் சம்மன் மீது உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால் நீங்கள் சம்மன் குறித்து உயர் நீதிமன்றத்தில் முறையிடலாம் சம்மன் மீது நடவடிக்கை எடுக்கலாம் என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்கள்.
மீண்டும் போலீசார் பல நபர்களிடம் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய பிறகு மீண்டும் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகத்தை விசாரணைக்கு ஏழு நாட்களுக்கு முன்பு சம்மன் அனுப்பி இன்று அழைத்துள்ளனர்.சம்மனில் விசாரணைக்கு வந்து ஆஜராகும்படி கேட்டுக்கொள்வதாக மட்டும் குறிப்பிட்டு அனுப்பியிருந்தார்கள்.எதையும் கொண்டு வர வேண்டும் என கூறவில்லை அதன் அடிப்படையில் இன்று கேசவ விநாயகம் சிபிசிஐடி போலீஸார் இடம் ஆஜரானார். எங்கள் தரப்பில் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளோம்.பணம் எங்களுடையது இல்லை என்பதை தெளிவாக கூறியிருக்கிறோம்.
அமைப்பு பொதுச்செயலாளருக்கும், இந்த பணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதையும் தெளிவாக கூறியிருக்கிறோம். நயினார் நாகேந்திரன் தேர்தல் செலவுக்காக கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட்ட பணம் என்பது அவர்கள் ஜோடித்து இருக்கிறார்கள் என்று கூறி வருகிறோம். தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிப்பட்ட பணம் வேறொரு நபர் ( முஸ்தபா) பணம் என்றும் அவர் வருமான வரித்துறை அலுவலகத்தில் அது குறித்து கேட்டிருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் எங்களையும் பாரதிய ஜனதா கட்சியையும் மீண்டும் மீண்டும் இந்த பண பிடிப்பட்ட வழக்கில் தொடர்பு படுத்துவது என்பது பாரதிய ஜனதா கட்சி மக்களிடம் பணம் கொடுத்து ஓட்டு வாங்குவதற்கு திட்டம் போட்டது போல என்பதை சொல்வது போல ஒரு நாடகத்தை வடிவமைப்பதற்கு இந்த செயலை செய்திருக்கிறார்கள். தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை தெளிவாக கூறியிருக்கிறார் தேர்தலில் ஒரு பைசா கூட கொடுக்க மாட்டோம் என கூறி தேர்தலை சந்தித்தோம்.
மாநில அமைப்பு பொதுச்செயலாளரை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த வழக்கில் அவரை சேர்க்க வேண்டும் என்பதற்காக தமிழக பாரதிய ஜனதா கட்சியை கலங்க படுத்த வேண்டும் என்பதற்காக இந்த விசாரணைக்கு அழைத்தார்கள் என்று சொல்கிறோம். இன்று கேசவ விநாயகத்திலும் ஏறத்தாழ 180 கேள்விகள் கேட்கப்பட்டது அனைத்து கேள்விகளுக்கும் அவர் தெளிவாக பதில் அளித்துள்ளார் காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளித்துள்ளார்.நான்கு கோடி ரூபாய் பிடிபட்ட பணத்திற்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை நயினார் நாகேந்திரன் தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் அல்ல அந்த பணம் யாருடையது என்பது குறித்து எங்களுக்கு தெரியாது யாருடைய பணம் என்பதை நீங்கள் விசாரித்து கொள்ளுங்கள் என தெளிவாக கூறியிருக்கிறார் கேசவ விநாயகம்.
இனிமேல் கேசவ விநாயகம் இந்த வழக்கில் ஆஜராக வேண்டிய தேவை இருக்காது என்று நான் நம்புகிறேன்.செல்போன் கொடுக்க முடியாது என முதலிலே சொல்லி விட்டோம் உச்ச நீதிமன்றத்திலும் இது குறித்து கூறியிருக்கிறோம் எதற்காக கொடுக்க முடியாது என்றால் தேர்தல் நேரத்தில் யாருக்கெல்லாம் பேச விநாயகம் போன் செய்து பேசி பேசி உள்ளார் என்பதை பார்ப்பதற்காக கேட்கிறார்கள். சிடிஆர் மூலம் பெற்றுக்கொள்ளலாம் எனவே எனது மொபைல் போன் கொடுக்க முடியாது குறிப்பாக மொபைல் போன் என்பது தனிப்பட்ட புத்தகமாக தற்போது அனைவருக்கும் மாறி உள்ளது நம்முடைய தனிப்பட்ட விவகாரங்கள் இருக்கிறது அரசியல் விவகாரங்கள் இருக்கிறது குறிப்பாக பல்வேறு மாநிலங்களில் கட்சி ரீதியாக பேச விநாயகம் வேலை செய்திருக்கிறார். அரசியல் ரீதியாக சில திட்டங்கள் வகுத்து இருப்போம் எனவே செல்போனை கொடுக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் கூறியிருந்தோம் தற்பொழுது அவர்கள் விசாரணையில் செல்போனை கேட்கவும் இல்லை நாங்கள் கொடுக்கவும் இல்லை என தெரிவித்தார்.
What's Your Reaction?