குட்கா முறைகேடு தொடர்பான விசாரனை... அதிகாரி நேரில் ஆஜராக CBI நீதிமன்றம் உத்தரவு...
குட்கா முறைகேடு தொடர்பான விசாரணை நடத்தும் அதிகாரியை நேரில் ஆஜராக CBI சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து குட்கா பொருள்கள் விற்பனை செய்ததாக டெல்லி சிபிஐ சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கு இன்று(06.03.2024) நீதிபதி மலர் வாலன்டினா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம்சாட்டப்பட்ட இரண்டு பேருக்கு எதிரான கூடுதல் குற்றப்பத்திரிக்கை விசாரணைக்கு அனுமதி கடிதம் கிடைக்கவில்லை என CBI தரப்பில் மீண்டும் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து பல விசாரணைக்கு இதே காரணத்தை கூறிவருவதாக நீதிபதி அதிருப்தி தெரிவித்த நிலையில், விசாரணை நிலை என்ன என்பது குறித்து நேரில் ஆஜராகி விசாரணை அதிகாரி தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 21ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
What's Your Reaction?