‘நம்பர் 1’ வீராங்கனைக்கு செக்..... காலிறுதிக்கு முன்னேறிய சாரா பெஜ்லக்!
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் போட்டியில் 4 வது சுற்றில் நம்பர் 1 வீராங்கனை தோல்வி அடைந்திருப்பது அவரின் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் சின்சினாட்டி நகரில் நடைபெற்று வரும் நிலையில் இத்தொடர் போட்டி வருகின்ற 23 ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை ஆடிய சாரா பெஜ்லக் 7-6 (9-7), 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியதால் இதன்மூலம் நம்பர் ஒன் வீராங்கனையான சபலென்கா 4 வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்து இத்தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.
இந்நிலையில் அதினா சபலென்கா கடந்த மாதம் நடந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடர்,மற்றும் இம்மாதத்தின் தொடக்கத்தில் நடந்த கனடா ஓபன் டென்னிஸ் தொடரிலும் தோல்வி அடைந்திருப்பது அவரின் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பு ஆண்டில் பிரிஸ்பேன் ஓபன், இந்தியன் வெல்ஸ் மற்றும் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர்களில் மட்டுமே சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று ஆகும்.
மேலும் நாளை நடைபெறவுள்ள காலிறுதி சுற்றில் செக் குடியரசின் சாரா பெஜ்லக் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் உடன் மோத இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
What's Your Reaction?