கள களனு ஹாரர்..திகிலான ஹூயூமர்: சந்தானத்தின் DD Next Level டிரைலர் வெளியானது!
சந்தானத்தின் நடிப்பில் உருவாகியுள்ள DD Next Level திரைப்படத்தின் டிரைலர் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.இது ரசிகர்களை கவர்ந்துள்ளதா? இல்லையா?

DD Next Level Trailer Release: தில்லுக்கு துட்டு படத்தின் நீட்சியாக உருவாகியுள்ள DD Next Level திரைப்படத்தில் சந்தானம், கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன், கீதிகா திவாரி, யாஷிகா ஆனந்த், கஸ்தூரி சங்கர், நிழல்கள் ரவி, மாறன் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரேம் ஆனந்த் இப்படத்தினை இயக்கியுள்ள நிலையில், இத்திரைப்படம் வருகிற மே 16 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. டிரைலரை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சிம்பு, கார்த்தி, விஷால், ஆர்யா ஆகியோர் வெளியிட்டனர்.
டிரைலரின் தொடக்க காட்சியில் ஆளில்லாத தியேட்டருக்குள் பேயாக இயக்குனர் செல்வராகவன் அமர்ந்துள்ளார். தியேட்டருக்குள் நுழையும் நடிகர் சந்தானம் திரையில் ஓடும் திரைப்படத்திற்குள் நுழைகிறார். அதன் பின் என்ன நடக்கிறது என்பது தான்? படத்தின் ஒன்லைன் கதையாக டிரைலர் மூலம் ரசிகர்கள் புரிந்துக் கொள்ள முடிகிறது. டிரைலர் முழு நீள காமெடி திரைப்படம் என்பதை உறுதி செய்யும் வகையில் உள்ளது, மேலும் சந்தானத்தின் டைமிங் காமெடி சில டிரைலரில் இடம்பெற்றுள்ளன.
படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் ஒகே என சொல்ல வைத்துள்ள நிலையில், பெரிதும் மதிக்கப்பட்ட இயக்குனர்களான செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன் போன்றோரை இந்த மாதிரி கதாபாத்திரங்களில் காண வேண்டிய சூழ்நிலையா? என ரசிகர்களை வருத்தப்படவும் வைத்துள்ளது. தில்லுக்கு துட்டு படத்தினை போல் இதுவும் திரையரங்கில் ஹிட் அடிக்குமா என்பது வருகிற மே 16 ஆம் தேதி தெரிந்துவிடும்.
Read more: Movie Release Date: தனுஷ் முதல் சூரி வரை.. போட்டி போட்டு பட வெளியீடு தேதி அறிவித்த ஹீரோக்கள்
What's Your Reaction?






