PrakashRaj: பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா விதிமீறல்… கொடைக்கானலில் வீடு கட்டட பணிகள் நிறுத்தம்

கொடைக்கானலில் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா இருவரது வீடுகளின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Mar 5, 2024 - 17:59
PrakashRaj: பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா விதிமீறல்… கொடைக்கானலில் வீடு கட்டட பணிகள் நிறுத்தம்

பிரபல நடிகர்களான பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா இருவரும் கொடைக்கானலில் இடம் வாங்கி வீடு கட்டி வருகின்றனர். இதில் விதிமுறை மீறல்கள் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா இருவரது வீடுகளின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.  

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஜுனைத் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில் நடிகர்கள் பிரகாஷ்ராஜும் பாபி சிம்ஹாவும் சொந்தமாக பங்களா கட்டி வருகின்றனர். இதற்கு கொடைக்கானல் நகராட்சியிடம் உரிய அனுமதி பெறாமலும் விதிமுறைகளை பின்பற்றாமலும் பணிகள் நடைபெறுகின்றன. இதனால் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதோடு, அருகில் உள்ள வீடுகளும் இடிவதற்கு அதிக சாத்தியங்கள் உள்ளன.  

அதேபோல், கனரக இயந்திரங்கள் மூலம் பாறைகளையும் அகற்றியுள்ளனர். இதுவும் விதிமுறைகளை பின்பற்றாமல் நடைபெற்றுள்ளது. எனவே பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.   

இந்த வழக்கை நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் இருவரும் விசாரித்தனர். அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா ஆகியோர் கொடைக்கானலில் கட்டியுள்ள வீடுகளுக்கு உரிய அனுமதி பெறவில்லை. இந்த கட்டுமானப் பணிகளை நிறுத்த நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதால் தற்போது எதுவும் நடக்கவில்லை. மேலும், உள்ளூர் திட்டக் குழுமம் அனுமதியற்ற கட்டுமானம் மீது தேவையான நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow