Movie Release Date: தனுஷ் முதல் சூரி வரை.. போட்டி போட்டு பட வெளியீடு தேதி அறிவித்த ஹீரோக்கள்
தமிழ்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தனுஷ்,சிவகார்த்திகேயன்,சந்தானம்,சூரி ஆகியோரின் பட வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதராசி: சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள 'மதராசி' படத்தின் வெளியீட்டு தேதியும் தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு ஸ்பெஷல் போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஆசிரியர் தினமான செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
அமரன் படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றியினை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் இது என்பதால், இப்படத்தின் மீதான் எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது, தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வரும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸூக்கு இப்படம் ஒரு தோல்விகளிலிருந்து ப்ரேக் கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. முதன்முறையாக ஏ.ஆர்.முருகதாஸுடன் சிவகார்த்திகேயன் கைக்கோர்த்திருக்கும் நிலையில், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
குபேரா:
தனுஷ் நடிக்கும் குபேரா திரைப்படம் ஜூன் 20, 2025 அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தின் முதல் பாடல் ஏப்ரல் 20, 2025 அன்று வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் மற்றும் தலிப் தஹில் போன்றோர் நடிப்பில் உருவாகி வரும் குபேரா திரைப்படத்தினை சேகர் கம்முலா இயக்கியுள்ளார். தனுஷின் இயக்கத்தில் தொடர்ச்சியாக வெளியான ராயன் மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்? போன்ற திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் சொதப்பிய நிலையில் இப்படத்தின் வெற்றியே தனுஷ் ரசிகர்கள் உற்று நோக்கியுள்ளார்கள்.
மாமன்:
குடும்பப் பின்னணியிலான கதையினை கொண்ட “மாமன்” படம் வருகிற மே 16 ஆம் தேதி திரையில் வெளியாக உள்ளது என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கதையின் நாயகனாக விசாரணை, கருடன் படங்களில் அசத்திய சூரி இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கும் இப்படத்தில் நடிகர் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
DD Next Level :
தில்லுக்கு துட்டு படத்தின் நீட்சியாக உருவாகியுள்ள DD Next Level திரைப்படத்தில் சந்தானம், கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன், கீதிகா திவாரி, யாஷிகா ஆனந்த், கஸ்தூரி சங்கர், நிழல்கள் ரவி, மாறன் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரேம் ஆனந்த் இப்படத்தினை இயக்கியுள்ள நிலையில், இத்திரைப்படம் வருகிற மே 16 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது,
What's Your Reaction?






