சிவகார்த்திகேயன் சார் வந்ததும் எங்கள் வேலை ஈஸியாயிடுச்சு- ஹவுஸ்மேட்ஸ் இயக்குநர்!

“முதல் படம் எடுப்பது சவாலான விஷயம். எடுத்த படத்தை வெளியிடுவது இன்னும் சவாலானது. அதை SK புரொடெக்‌ஷன்ஸ் எளிமையாக செய்து கொடுத்தது. சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி” என ஹவுஸ்மேட்ஸ் படத்தின் இயக்குநர் ராஜவேல் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் சார் வந்ததும் எங்கள் வேலை ஈஸியாயிடுச்சு- ஹவுஸ்மேட்ஸ் இயக்குநர்!
sivakarthikeyan productions house mates creates buzz at pre release event

இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஹவுஸ் மேட்ஸ்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 1 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சிவகார்த்திகேயன் புரொடெக்‌ஷன்ஸ் இத்திரைப்படத்தினை இணைந்து தயாரித்துள்ளது.

இந்நிலையில் படக்குழுவினர் சார்பில், பட வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு சென்னையில் நடைப்பெற்றது.

எனக்கு நல்ல கதாபாத்திரம்: நடிகை வினோதினி

நிகழ்வில் பங்கேற்ற நடிகை வினோதினி பேசுகையில், "இந்த நல்ல படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்த இயக்குநருக்கு நன்றி. இந்தப் படம் நல்ல படம் என்பதை மிகவும் நம்பிக்கையாக என்னால் சொல்ல முடியும். சக்திவேல் கிரியேட்டிவ் புரொடியூசர் ஆக இந்த படத்தில் வேலை பார்த்திருக்கிறார். நல்ல படங்களில் எப்போதும் அவருடைய பங்கு இருக்கும். இந்த சின்ன படத்தில் சிவகார்த்திகேயன் உள்ளே நுழைந்ததும் பெரிய படமாக மாறிவிட்டது. அவருக்கும் நன்றி. தர்ஷன், காளி வெங்கட் இருவரின் வளர்ச்சியும் பிரம்மிக்க வைக்கிறது. படம் வெளியானதும் நிச்சயம் அனைவரின் நடிப்பும் பாராட்டப்படும்".

இயக்குநர் அஜய் ஞானமுத்து பேசுகையில், "படம் பார்த்து முடித்ததும் இயக்குநரை கட்டிப்பிடித்துக் கொண்டேன். வெற்றி படமாக இதைக் கொண்டு வந்திருக்கிறார்கள். படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்கள். நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். எஸ்கே புரொடெக்‌ஷன்ஸ் படத்தை வாங்கியுள்ளது என்பதே படத்தின் முதல் வெற்றி. படம் கண்டிப்பாக அடுத்த லெவல் சென்றிருக்கிறது"

SK புரொடெக்‌ஷன்ஸ், இணைத் தயாரிப்பாளர் கலை அரசு, " நல்ல கன்டென்ட் மற்றும் புது திறமையாளர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நாங்கள் இயங்கி வருகிறோம். அந்த வகையில் 'கனா' படத்தில் இருந்து ஆரம்பித்து இப்போது 'ஹவுஸ் மேட்ஸ்' எட்டாவது படமாக வெளியிட இருக்கிறோம். ஃபேமிலி என்டர்டர்டெயினராக படம் உருவாகி இருக்கிறது. படம் வெளியானதற்கு பிறகு நிச்சயம் இயக்குநரின் வேலை பேசப்படும். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்".

முதல் படம் எடுப்பது சவாலான விஷயம்:

இயக்குநர் ராஜவேல் பேசுகையில், "இந்த படம் சாதாரணமாக தான் ஆரம்பித்தது. ஆனால், இவ்வளவு பெரிய மேடை இந்த படத்திற்கு அமைந்தது சிவகார்த்திகேயன் புரொடெக்‌ஷன்ஸ் தான் காரணம். முதல் படம் எடுப்பது சவாலான விஷயம். எடுத்த படத்தை வெளியிடுவது இன்னும் சவாலானது. அதை SK புரொடெக்‌ஷன்ஸ் எளிமையாக செய்து கொடுத்தது. சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி. இயக்குநர் அஜய் ஞானமுத்துவிடம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். நான் கஷ்டப்பட்ட சமயத்தில் கூட இருந்த விஜய்க்கு நன்றி. தர்ஷன், காளி வெங்கட், வினோதினி மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. படத்தில் நிறைய சின்ன சின்ன சர்ப்ரைஸ் இருக்கிறது. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்".

நடிகர் காளி வெங்கட் பேசுகையில், "எனக்கு மட்டுமல்ல, பார்வையாளர்களுக்கும் இது முக்கியமான படமாக இருக்கும். என்னை நம்பி இந்தக் கதாபாத்திரம் கொடுத்த இயக்குநருக்கு நன்றி. படம் பார்த்துவிட்டு வாழ்த்திய சிவகார்த்திகேயன், கலை மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. படத்தில் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு. ஆகஸ்ட் 1 அன்று படம் பாருங்கள்". 

ஹவுஸ்மேட்ஸ்: பேமிலி எண்டர்டெயின்மெண்ட் திரைப்படம்

நடிகர் தர்ஷன் பேசுகையில், "இதுபோன்ற கதையில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. அது 'ஹவுஸ் மேட்ஸ்' படத்தில் அமைந்திருக்கிறது. என்னை நம்பி இந்த கதாபாத்திரம் கொடுத்த இயக்குநருக்கு நன்றி. படக்குழுவினர் அனைவரும் கடினமாக உழைத்துள்ளனர். படத்தின் ஐடியா, திரைக்கதை இதெல்லாம் சிவகார்த்திகேயன் அண்ணாவுக்கு மிகவும் பிடித்தது. படத்தை வெளியிட ஒத்துக்கொண்டதற்கு அண்ணாவுக்கு நன்றி.

டிரெய்லர் பார்த்துவிட்டு நிறைய பேர் ஹாரர் படமா என்று கேட்டார்கள். அதையும் தாண்டி என்கேஜிங்கான திரைக்கதையும் ஆச்சரியங்களும் கொண்ட ஃபேமிலி எண்டர்டெயின்மெண்ட் படம் இது. காளி வெங்கட் அண்ணாவுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவை கொடுங்கள்" என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow