மாற்றுத்திறனாளியாக நடிக்கப்போறேன்...   உருகிய ராகவா லாரன்ஸ்...

மாற்றுத்திறனாளிகளை வைத்து படம் எடுக்கவுள்ளதாகவும் அதன் மூலம் வரும் வருமானத்தில் அவர்களுக்கு வீடு கட்டி தர உள்ளதாகவும் நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். 

Apr 15, 2024 - 21:44
மாற்றுத்திறனாளியாக நடிக்கப்போறேன்...   உருகிய ராகவா லாரன்ஸ்...

நடிகர் ராகவா லாரன்ஸ் அறக்கட்டளை ஆதரவில் நடன நிகழ்ச்சிகள் நடத்தி வரும் மாற்றுதிறனாளி கலைஞர்கள், சென்னையில் நேற்று (ஏப்ரல் 14) மல்லர் கம்பம் சாகசத்தை நிகழ்த்தி காண்பித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர்களது சாகசங்களை நடிகர் ராகவா லாரன்ஸ் கண்டு களித்தார். நிகழ்ச்சியில் பேசிய லாரன்ஸ், தனக்கு எப்போதும் ஊக்கம் தருவது இந்த மாற்றுத்திறனாளி குழுவினர் தான். தான் தளர்வாக இருந்தால் இவர்களை ஆட வைத்து அதை  பார்த்து ஊக்கம் கொள்வேன் என்று கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், எப்போதெல்லாம் தனக்கு வாய்ப்பு கிடைத்தாலும், என் பட பாடல்களில் டான்ஸில் ஆட வைப்பேன். சினிமாவில் சிலர் ஒரே மாதிரி இருக்கிறதே... இவர்களையே தொடர்ந்து பயன்படுத்த வேண்டாம் என்பார்கள், த்ரிஷா, நயன்தாரா எத்தனை முறை ஆடினாலும் பார்க்கிறார்களே அதுபோல் இவர்களையும் பார்க்கட்டும் என்று கூறுவேன்.

சில காலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்புகள் குறைவாக இருக்கிறதே எனக் கவலைப்பட்டேன். மாற்றுத்திறனாளி பசங்க என்கிட்ட வந்து வருத்தமா, 'மாஸ்டர், வீட்டு வாடகை கட்ட முடியலை'னு சொல்லுவாங்க.  நான் அவங்களுக்காக ஒரு மேடையை ரெடி பண்ணி நிகழ்ச்சிகள் பண்ணலாம்னு யோசிச்சிருக்கேன். இந்தப் பசங்க எப்பவும் பஸ்லதான் போறாங்க. அது அவங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அதுனால அவங்களுக்காக நாளைக்கு என் வீட்டுல வச்சு ஸ்கூட்டி கொடுக்கப்போறேன். அதுமட்டுமல்ல, மாற்றுத்திறனாளிகளுக்காகவே ஒரு படம் பண்ணப்போறேன். அதுல நான் மாற்றுத்திறனாளியாக நடிக்கப்போறேன். அந்தப் படத்துல கிடைக்கிற பணத்தை வச்சு மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு கட்டித் தரப்போறேன்" என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய லாரன்ஸ் குழுவை சேர்ந்த மாற்றுதிறனாளிகள், மக்கள் கொடுக்கும் கைதட்டல், தன்னம்பிக்கை எல்லாவற்றிருக்கும் காரணமான ராகவா லாரன்ஸ் மாஸ்டருக்கு இந்நேரத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறோம். எங்களை கடவுள் மாற்றுத்திறனாளிகளாக படைத்தாலும், அம்மா அப்பா ஏழ்மையாக இருந்தாலும், ராகவா லாரன்ஸ் மாஸ்டர் எங்களுக்கு என ஒரு அறக்கட்டளை உருவாக்கி, எங்களுக்கு பயிற்சி தந்து வாய்ப்புகள் வாங்கித் தந்தார். டான்ஸ் மட்டுமல்லாமல் இப்போது எங்களுக்கு மல்லர் கம்பம் பயிற்சி தர, இப்போது எங்கள் குழுவிற்கு பல வாய்ப்புகள் தொடர்ந்து வர ஆரம்பித்துள்ளது என்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow