குட்டி சஞ்சய் - சூர்யா! சிறந்த மகன் - ஜோதிகா ! ஜேசன் சஞ்சயை பாராட்டிய CUTE COUPLES !
சிக்மா திரைப்படம் வெளியாகும் நிலையில் இயக்குநர் ஜேசன் சஞ்சய்க்கு நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா தனித்தனியாக வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், அவர்களின் பதிவுகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.
ஒருபக்கம் நடிகர் சூர்யா... மறுபக்கம் நடிகை ஜோதிகா... ஒரே படத்தின் இயக்குநரையும் படக்குழுவினரையும் இருவரும் தனித்தனியாக வாழ்த்தியிருப்பது தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. இயக்குநராக ஜேசன் சஞ்சய் அறிமுகமாகும் "சிக்மா" திரைப்படம் நாளை (அக்.2) திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், அவருக்கு சூர்யாவும் ஜோதிகாவும் தெரிவித்துள்ள வாழ்த்துகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ படத்தின் மூலம் நடிகரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன் கதாநாயகனாகவும், ஃபரியா அப்துல்லா கதாநாயகியாகவும் நடித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
“குட்டி சஞ்சய் இப்போது இயக்குநர்!” :
‘சிக்மா’ படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நடிகர் சூர்யா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜேசன் சஞ்சய்யை அன்புடன் குறிப்பிட்டுள்ள சூர்யா, சிறுவயதில் பார்த்த ‘குட்டி சஞ்சய்’ தற்போது இயக்குநராக மாறியிருப்பதை நம்ப முடியவில்லை என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மேலும், சஞ்சய்யின் புதிய பயணத்துக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்த சூர்யா, சந்தீப் கிஷன் மற்றும் ஒட்டுமொத்த ‘சிக்மா’ படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.
ஜோதிகாவும் சொன்ன வாழ்த்து :
சூர்யாவின் வாழ்த்துப் பதிவு கவனம் பெற்ற நிலையில், நடிகை ஜோதிகாவும் ஜேசன் சஞ்சய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் ‘சிக்மா’ படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த அவர், ஜேசன் சஞ்சய்யின் நேர்காணல்களைப் பார்த்தபோது அவர் அமைதியான, பக்குவமான மற்றும் இயல்பான இளைஞராகத் தெரிந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவர் தனது பெற்றோருக்கு சிறந்த மகனாக இருப்பதுடன், அவருக்குக் கிடைக்கவுள்ள வெற்றிக்கும் தகுதியானவர் என ஜோதிகா தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
“சிக்மா” வெளியீடு சிறப்பாக அமையட்டும்! :
ஜேசன் சஞ்சய் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஜோதிகா, ‘சிக்மா’ திரைப்படத்தின் வெளியீடு சிறப்பாக அமைய வேண்டும் என்றும் வாழ்த்தியுள்ளார். அதோடு, ஜேசன் சஞ்சய்க்கு கடவுளின் ஆசீர்வாதம் எப்போதும் இருக்கட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் வைரலாகும் வாழ்த்துகள் :
ஜேசன் சஞ்சய்யின் முதல் படமான ‘சிக்மா’வுக்கு சூர்யா எக்ஸ் தளத்திலும், ஜோதிகா இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலமாகவும் வாழ்த்து தெரிவித்திருப்பது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
இருவரின் பதிவுகளிலும் ஜேசன் சஞ்சய் மட்டுமின்றி, சந்தீப் கிஷன் மற்றும் படக்குழுவினருக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சூர்யா மற்றும் ஜோதிகாவின் இந்த வாழ்த்துப் பதிவுகளை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
நாளை வெளியாகும் ‘சிக்மா’ :
ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் நாளை (அக்.2) திரையரங்குகளில் வெளியாகிறது. ஜேசன் சஞ்சய்யின் முதல் இயக்குநர் முயற்சி என்பதால், படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
What's Your Reaction?



