மக்கள் வரிப்பணத்தில் எம்.எல்.ஏ-க்களுக்கு கார்... சர்ச்சையாகும் முதல்வரின் அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

Aug 19, 2026 - 10:18
Aug 19, 2026 - 10:32
மக்கள் வரிப்பணத்தில் எம்.எல்.ஏ-க்களுக்கு கார்... சர்ச்சையாகும் முதல்வரின் அறிவிப்பு!
CM Vijay announces Important Schemes

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். மருத்துவம், சுகாதாரம், பால் உற்பத்தியாளர்கள் நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான அறிவிப்புகள் இதில் இடம்பெற்றன.

"புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்தும் வகையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.470 கோடி மதிப்பீட்டில் புதிய புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும்" என முதலமைச்சர் விஜய் அறிவித்தார். மேலும், "5 மருத்துவமனைகளில் மண்டல புற்றுநோய் மையங்கள் தொடங்கப்படும்" என்றும் தெரிவித்தார்.

“முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு திட்டம் மேம்படுத்தப்படும். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ரூ.470 கோடியில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும்” என முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.

"பெரம்பூரில் ரூ.300 கோடி செலவில் 400 படுக்கைகள் கொண்ட பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்" என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

"முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும்" எனவும் தெரிவிக்கப்பட்டது.

"செவிலியர் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ரூ.351 கோடி மதிப்பீட்டில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், 7 அரசு மருத்துவக் கல்லூரிகளில் திருநங்கைகளுக்கான அறுவை சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்படும்" என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.

பால் உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆவின் பால் கொள்முதல் விலையும் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

“பால் உற்பத்தியாளர்கள் நலனை கருத்தில் கொண்டு பால் கொள்முதல் விலையை உயர்த்துவது அரசின் கடமை. ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.38-ல் இருந்து ரூ.41 ஆக உயர்த்தப்படும்” என முதலமைச்சர் விஜய் கூறினார்.

"அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் வழங்கப்படும்" முதலமைச்சர் விஜய்

இதனிடையே, சட்டமன்ற உறுப்பினர்களுக்கான உறுப்பினர்கள் மற்றும் வாகன உதவியாளர்கள் தொடர்பாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. "வாகனப் படியாக மாதந்தோறும் ரூ.75,000 வழங்கப்படும் என்றும், உதவியாளர் ஒருவரை நியமித்துக்கொள்ள மாதந்தோறும் ரூ.25,000 வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.

 “வாகனத்திற்காக மாதந்தோறும் ரூ.75,000 வாகனப்படியாக வழங்கப்படும். ஒரு உதவியாளரை நியமித்துக்கொள்ள மாதந்தோறும் ரூ.25,000 வழங்கப்படும்” என முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.

ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அனைத்து படிகளையும் சேர்த்து மாதம் ரூ.1.05 லட்சம் வழங்கப்பட்டு வருவதாகவும், சட்டமன்ற அமர்வுகள் நடைபெறும் நாட்களில் தினப்படியாக ரூ.500 வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவம் முதல் பால் கொள்முதல் விலை வரை பல்வேறு துறைகளை உள்ளடக்கிய இந்த அறிவிப்புகள் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow