பயிர் சேதத்திற்கு உரிய நிவாரண வழங்கப்படும் -அமைச்சர் கே.என். நேரு
மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகளை உடனடியாக செப்பனிட போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விரைவில் தொடங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மழை நீர் கால்வாய்கள் அமைக்க உடனடியாக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதிகளை அமைச்சர் கே.என். நேரு ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தி ஆலோசனைகளை வழங்கினார். நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் பகுதியில் தேங்கியிருந்த மழை நீர் வெளியேற்றும் பணிகளை அமைச்சர் கே.என். நேரு பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நெல்லை மாநகர பகுதிகளான சந்திப்பு பேருந்து நிலையம் டவுன் உள்ளிட்ட இடங்களில் மழை நீர் அதிகளவு தேங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் வருங்காலங்களில் பாதிப்பு ஏற்படாத வகையில் திட்டங்கள் தயார் செய்யப்பட்டு சுமார் 5 கோடி மதிப்பில் மழைநீர் கால்வாய் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது. முக்கூடல் பாபநாசம் ஆலங்குளம் சாலையிலும் மழைநீர் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகளை உடனடியாக செப்பனிட போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விரைவில் தொடங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியும் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படாத வகையில் பல்வேறு பகுதிகளில் இருந்து 20 ராட்சச மின்மோட்டார்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள இடங்கள் குறித்தான கணக்கெடுப்பு பணி நடந்து . முழு தகவல் கிடைக்கப்பெற்றுடன் முதலமைச்சர் உத்தரவுபடி நிவாரணங்கள் வழங்கப்படும் ”என தெரிவித்தார்.
What's Your Reaction?