தேர்தலுக்கு அவகாசம்: எதிர்க்கட்சிகள் குறித்து பேச வேண்டிய அவசியமில்லை- உதயநிதி ஸ்டாலின்
மெட்ரோ ரயில் பணிகளும் முக்கியமானது. அதற்கான வேலைகள் சென்னையில் நடக்கிறது. அதே நேரத்தில் மழை நீர் பாதிப்பு இல்லாமல் இருக்கவும் கவனம் செலுத்துகிறோம்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கால அவகாசம் இருக்கிறது.அதற்குள் எதிர்க்கட்சிகள் குறித்து தற்போது பேச வேண்டிய அவசியம் இல்லை என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஸ்டார்ட்டப் நிறுவனங்கள் தொடங்கும் பட்டியலின நபர்களின் உதவிக்காக 50 கோடியாக உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக துணை
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.ஸ்டார்ட்டப் நிறுவனங்களுக்கு உதவும் Co working space center பல மாவட்டத்தில் உருவாக்கவும், தமிழக அரசு நடவடிக்கைகள் எடுக்கும் என துணை முதல்வர் தெரிவித்தார்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்ககம் சார்பில் "STARTUP CHENNAI - செய்க புதுமை" மற்றும் புதிய திட்டங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் ஸ்டார்ட்டப் நிறுவனங்களை தொடங்குபவர்களுக்கு உதவும் வகையில் பெரியார் சமூக நீதி தொழில் வளர் மையத்தையும் துணை முதல்வர் தொடங்கி வைத்தார்.மேலும் இந்த நிகழ்வில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடி, இன்னசன்ட் திவ்யா ஐ.ஏ.எஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
விழா மேடையில் பேசிய ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடி , “தொழில் அதிபர்கள் நாட்டில் அதிகம் உருவாக வேண்டும். இதன் மூலம் இளம் தலைமுறையினரை ஊக்குவிக்க வேண்டியது அவசியம் என்றார். தமிழக அரசும் பல திட்டங்களை செயல்படுத்துகிறது என்றும், தேசிய அளவில் Startup நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்னையை தீர்க்க வேண்டியது அவசியம் என தெரிவித்தார்.
தமிழக அரசுடன் ஐ.ஐ.டி இணைந்து பல முன்னெடுப்பு செய்து வருவதாகவும், காலநிலை மாற்றம், பசுமையான நடவடிக்கைகள் நோக்கி ஐ.ஐ.டி பல திட்டங்களை செயல்படுத்த இருப்பதாக கூறினார். மேலும் தமிழக மாணவர்கள் பல Startup நிறுவனங்கள் நடத்துவது பெருமை என்றும், ஒரு வருடத்திற்கு ஆயிரம் ஸ்டார்ட்டப் நிறுவனங்கள் உருவாக வேண்டும் எனவும், ஐ.ஐ.டி இணைந்து பல முயற்சிகளை எடுக்கவும் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.இதைத்தொடர்ந்து பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பெண் தொழில்முனைவோர், மாணவர்கள் என ஸ்டார்ட்டப் நிறுவனத்திற்கு தமிழக அரசு பல உதவிகளை செய்து வருவதாகவும், புதுமையான பல நடவடிக்கையை தமிழக அரசு செயல்படுத்துவதாக தெரிவித்தார்.
ஸ்டார்ட்டப் நிறுவனங்கள் தமிழகம் முழுவதும் உருவாக வேண்டும் என திட்டமிடுவதாகவும், மேலும் பட்டியலின மக்கள் பயன்பெற 50 கோடி வரை நிதியை உயர்த்த முதலமைச்சர் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் புது,புது ஸ்டார்ட்டப் நிறுவனங்களை உருவாக்கினால் அதை சந்தைப்படுத்த தமிழக அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கால அவகாசம் இருக்கிறது.அதற்குள் எதிர்க்கட்சிகள் குறித்து தற்போது பேச வேண்டிய அவசியம் இல்லை.Co working space center ஸ்டார்ட்டப் நிறுவனங்களுக்கு உதவ கூடுதலாக கொண்டு வர திட்டம் இருக்கிறது. அரசு அதற்கான நடவடிக்கை எடுக்கும்.மெட்ரோ ரயில் பணிகளும் முக்கியமானது. அதற்கான வேலைகள் சென்னையில் நடக்கிறது. அதே நேரத்தில் மழை நீர் பாதிப்பு இல்லாமல் இருக்கவும் கவனம் செலுத்துகிறோம். பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பதில் எந்த குழப்பமும் இல்லை என கூறினார்.
What's Your Reaction?