சென்னையில் கோடை மழைக்கு வாய்ப்பில்லை ராஜா.. பாலச்சந்திரன் சொன்ன பேட் நியூஸ்

சென்னையில் கோடை மழைக்கு வாய்ப்பே இல்லை என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

May 3, 2024 - 17:46
சென்னையில் கோடை மழைக்கு வாய்ப்பில்லை ராஜா..  பாலச்சந்திரன் சொன்ன பேட் நியூஸ்


கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர காலம் தமிழ்நாட்டில் நாளை தொடங்க உள்ள நிலையில், 17 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. மேலும், இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்ப அலை வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர், இன்று முதல் 6ஆம் தேதி வரை வட தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.

இதுவரை இல்லாத அளவில் இந்தாண்டு வெப்ப அலை அதிகரித்து காணப்படுகிறது. கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கோடை மழை பெய்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கரூர், பரமத்தி, ஈரோடு, தருமபுரி, திருத்தணி உள்ளிட்ட வட  தமிழக மாவட்டங்களான பத்து இடங்களில் அதிகபட்ச வெப்பநிலையாக 42 டிகிரி செல்சியஸ்க்கு அதிகமாக பதிவாகியுள்ளது. 

அதிகபட்சமாக கரூரில் 44.3 டிகிரி  செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இயல்பை விட அதிகம். வட உள் தமிழக மாவட்டங்களில்  ஓரிரு இடங்களில் வெப்பஅலை வீசியது. 

முன் அறிவிப்புகளைப் பொறுத்தவரையில் அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு தமிழகத்தின் உள்பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியசும், வட உள் தமிழக மாவட்டங்களில் இயல்பை விட மூன்று முதல் ஐந்து டிகிரி செல்சியசும் அதிகமாக பதிவாக கூடும் என கூறினார்.

வெப்ப அலையைப் பொறுத்தவரை மே 6ஆம் தேதி வரை வட உள்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்பாலை நிலவக்கூடும் என்றும்‌ கோடை மழை பொறுத்த வரையில் கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி தருமபுரி வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் கோடை மழை பெய்துள்ளது. அடுத்து வரும் ஐந்து தினங்களுக்கு உள் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள மாவட்டங்களில் ஓர் இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்யக்கூடும் என கூறினார்.

மேலும் மே 7ஆம் தேதி நீலகிரி,  ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது கோடை மலையைப் பொருத்தவரையில் கடந்த மார்ச் 1 முதல் இன்று வரையில் இயல்பு மழையானது ஆறு சென்டிமீட்டர் ஆனால் பெய்துள்ளது மழையின் அளவு ஒரு சென்டிமீட்டர் 74 சதவீதம் இயல்பை விட குறைவாக பெய்துள்ளது.

தமிழகத்தில் கோடை  மழை பெய்தால் மட்டுமே வெயில் குறைய வாய்ப்பு உள்ளது. மண்ணின் தன்மையை பொருத்து வெப்ப காற்று மாறுபடுகிறது. உள் தமிழகம் மற்றும் வட தமிழகத்தில் 3-5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க கூடும் என தெரிவித்தார்.

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 5 தினங்களில்  கோடை மழை பெய்யக்கூடும்.  சென்னையில் கோடை மழைக்கு வாய்ப்பே இல்லை எனவும் கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow