தமிழ் புத்தாண்டு ராசி பலன்: சிம்மம் ராசிக்காரர்களே..கெட்டிமேளம் கொட்டும் நேரமிது!

சிம்மம் ராசியினருக்கான தமிழ்ப்புத்தாண்டு பலன், பரிகாரங்களை துல்லியமாக கணித்து குமுதம் வாசகர்களுக்காக வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.

Apr 12, 2025 - 13:06
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: சிம்மம் ராசிக்காரர்களே..கெட்டிமேளம் கொட்டும் நேரமிது!
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: சிம்மம் ராசி

மங்களகரமான தமிழ்ப்புத்தாண்டான விஸ்வாவசு வருடம் ஜோதிடக் கணக்குகளின்படி 13.4.2025 அன்று நள்ளிரவு 2.58 மணிக்குப் பிறக்கிறது. அதேசமயம் 14.4.2025 அன்றே தமிழ்ப்புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. சிம்மம் ராசியினருக்கான தமிழ் புத்தாண்டு பலன் விவரங்கள் பின்வருமாறு-

சிம்மம்: பொறுப்புடன் செயல்பட்டால், பெருமைகள் பெறக்கூடிய ஆண்டு. அலுவலகத்தில் உங்கள் திறமை உணரப்படும். அதேசமயம் திட்டமிடலும் நேரம் தவறாமையும் இருந்தால் பதவி, பொறுப்புகள் கைகூடிவரும். பிறர் குறையைப் பெரிதுபடுத்திப் பேச வேண்டாம். மேலதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கையாளுங்கள்.

இல்லத்தில் நிம்மதி இடம்பிடிக்கும். அதை சினத்தால் விரட்டிவிட வேண்டாம். சுபகாரியங்களுக்காக கடன் வாங்க நேரிடலாம். மனம்விட்டுப் பேசினால், இளம் வயதினரின் மனம்போல மாங்கல்யம் கைகூடும். தினமும் சிறிது நேரமாவது குலதெய்வத்தைக் கும்பிடுவது நல்லது.

வர்த்தகம், வாணிபத்தில் உங்கள் உழைப்புக்கு ஏற்பவே வளர்ச்சி உருவாகும். அயல்நாட்டு வர்த்தகத்தில் அனுபவம் மிக்கவர்கள் ஆலோசனை கேளுங்கள். அரசு, அரசியல் துறையினர், மேலிடத்திடம் வாக்குவாதம் செய்தால், உள்ளதையும் இழக்கும் சூழல் உருவாகிவிடலாம். கலை, படைப்புத் துறையினர், செல்லும் இடங்களின் சட்டதிட்டங்களை மதித்து நடக்க வேண்டும். மாணவர்கள் சோம்பலை விரட்டி, கருத்து ஊன்றிப் படிக்க வேண்டிய காலகட்டம் இது.

பயணத்தில் கொண்டுசெல்லும் தஸ்தாவேஜுகள் பத்திரம். அயல்நாட்டுப் பயணத்தில் சட்டமீறல் மறந்தும் கூடாது. நரம்பு, மூட்டு, கழிவு உறுப்பு உபாதை, அஜீரணம், பரம்பரை நோய் அறிகுறிகள் தெரியலாம். பிள்ளையார்பட்டி கணபதியை தினமும் மனதார வணங்குங்கள். வாழ்க்கை பிரகாசிக்கும்.

Read more:  தமிழ் புத்தாண்டு ராசி பலன்: கன்னி ராசிக்காரர்களே.. நன்மைகள் கூடும்..நல்லதே நடக்கும்!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow