தமிழ் புத்தாண்டு ராசி பலன்: கன்னி ராசிக்காரர்களே.. நன்மைகள் கூடும்..நல்லதே நடக்கும்!
கன்னி ராசியினருக்கான தமிழ்ப்புத்தாண்டு பலன், பரிகாரங்களை துல்லியமாக கணித்து குமுதம் வாசகர்களுக்காக வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.

மங்களகரமான தமிழ்ப்புத்தாண்டான விஸ்வாவசு வருடம் ஜோதிடக் கணக்குகளின்படி 13.4.2025 அன்று நள்ளிரவு 2.58 மணிக்குப் பிறக்கிறது. அதேசமயம் 14.4.2025 அன்றே தமிழ்ப்புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. கன்னி ராசியினருக்கான தமிழ் புத்தாண்டு பலன் விவரங்கள் பின்வருமாறு-
கன்னி: நன்மைகள் அதிகரித்து நல்லவை நடக்கக் கூடிய ஆண்டு. அலுவலகத்தில் உங்கள் திறமை உணரப்படும். எந்த சமயத்திலும் சோம்பல் தலைதூக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது. யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் நீங்கள் தலையிட வேண்டாம். பதவி, ஊதிய உயர்வு, இடமாற்றம் தாமதமானாலும் மனம்போல கிட்டும். புதிய வாய்ப்பில் அவசரம் வேண்டாம்.
வீட்டில் விட்டுக் கொடுத்துப் போனால், தடைபட்ட விசேஷங்கள் கைகூடி வரத்தொடங்கும். விலகி இருந்த சொந்தங்கள் மீண்டும் வந்து சேரும். வாழ்க்கைத் துணையின் உடல்நலம் சீராகும். எந்த சமயத்திலும் சினமும் சீற்றமும் வேண்டாம். பிறமதத்தினரிடம் எல்லை வகுத்துப் பழகுங்கள்.
வர்த்தகம், வாணிபத்தில் புதிய முயற்சிகளைத் தவிருங்கள். பங்குவர்த்தகம், ரியல் எஸ்டேட்டில் நிதானம் அவசியம். அரசு, அரசியல் சார்ந்தவர்கள் சட்ட விதிமுறைகளை மதியுங்கள். யாருக்கும் ஜவாப், ஜாமீன் தரவேண்டாம். மாணவர்கள் சோம்பலைத் தவிர்த்து, அன்றன்றைய பாடங்களை அன்றன்றே படியுங்கள். கலை, படைப்புத் துறையினர் தீயசகவாசம் தெரிந்தால் உடனே ஒதுங்குவதே நல்லது.
தொலைதூரப் பயணங்களில் போதுமான ஓய்வு முக்கியம். ரத்த அழுத்த மாற்றம், ரத்தத் தொற்றுநோய், சளி, காது, மூக்கு, தொண்டை உபாதைகள் வரலாம். பரிக்கல் லக்ஷ்மி நரசிம்மரை தினமும் மனதார வணங்குங்கள். நல்லதே நடக்கும்.
Read more: தமிழ் புத்தாண்டு ராசி பலன்: கடகம் ராசிக்காரர்களே.. கவனமாக இருக்க வேண்டிய நேரம்
What's Your Reaction?






