தமிழகத்தில் ஆன்மிகமும், அரசியலும் கலக்கத்தான் செய்யும் - தமிழிசை சௌந்தரராஜன்

தமிழகத்தில் ஆன்மிகமும், அரசியலும் கலக்கத்தான் செய்யும் என துணை முதல்வர் உதயநிதிக்கு முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதிலளித்துள்ளார். 

Oct 20, 2024 - 20:25
தமிழகத்தில் ஆன்மிகமும், அரசியலும் கலக்கத்தான் செய்யும் - தமிழிசை சௌந்தரராஜன்
tamilisai soundararajan

பாஜகவைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில்... 

“தமிழ்நாடு துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கிரிவலம் போகவில்லை, சரி வலம்தான் போனதாக பதிவிட்டுள்ளார். இடம் போய் கொண்டு இருந்தவர்கள் வலம் போக ஆரம்பித்து இருக்கிறீர்கள். இதுவே ஆன்மிகத்தின் மிகப்பெரிய வெற்றிதான். மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என்று கூறி உள்ளார். தேர்தல் ஜனநாயகத்தில் யாரும் நிராகரிப்பட்டவர்கள் கிடையாது. 3 லட்சம் பேர் ஓட்டுப் போட்டு அங்கீகரித்து உள்ளார்கள். 

ஆன்மிகமும் அரசியலும் தமிழகத்தில் கலக்கவே கலக்காது என்கிறார் உதயநிதி. சவால் விடுகிறேன் தமிழகத்தில் ஆன்மிகமும் அரசியலும் கலக்கத்தான் செய்யும். அண்ணா வளர்த்தது தமிழ் அல்ல. ஆண்டாள் வளர்த்ததுதான் தமிழ். பெரியார் வளர்த்தது தமிழ் அல்ல. பெரியாழ்வார் வளர்த்ததுதான் தமிழ். 2026ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி முழுமையாக இருக்காது. நிச்சயம் உடையும்.  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் ஆட்சியில் பங்கு கேட்கிறார். 

திமுகவில் உதயநிதியைத் தயார் செய்வதால் அங்கு சமூக நீதி இல்லை. பிறகு திருமாவளவனுக்கு அங்கீகாரம் எங்கே கிடைக்கும். கம்யூனிஸ்டு கட்சியினர், சாம்சங் தொழிலாளர்களுக்காக போராட்டத்தை முன்னின்று நடத்தியுள்ளனர். ஆட்சியை எதிர்த்துப் போராட ஆரம்பித்து விட்டார்கள். கூட்டணிக் கட்சிகள் மட்டுமின்றி திமுக கட்சியிலேயே பிரச்னைகள் இருக்கின்றன. 2026ம் ஆண்டு தேர்தல் திமுகவிற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.” என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow