தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்.. புத்தாடை உடுத்தி பட்டாசு வெடித்து மகிழ்ச்சி

தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் காலை முதலே புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.

Oct 31, 2024 - 12:49

தஞ்சையில் தீபாவளி பண்டிகை களைகட்டி உள்ளது. மக்கள் அதிகாலையில்  குளித்து புத்தாடை உடுத்தி வீட்டின் வாசல் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். 

ஈரோடு வ.உ.சி பூங்கா மைதானத்தில் செயல்பட்டு வரும் நேதாஜி தினசரி காய்கறி சந்தை வியாபாரிகள் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது,  50க்கும் மேற்பட வியாபாரிகள் ஒன்றிணைந்து பாரம்பரிய உடையான வேட்டி -  சட்டை அணிந்து  பட்டாசுகள் வெடித்தனர். குறிப்பாக கம்பிமத்தாப்பூ , சரவெடி , வாண வேடிக்கை என பல வகையான பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். அதனை தொடர்ந்து சக வியாபாரிகளுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

புதுக்கோட்டை நகர பகுதிகளில் பொதுமக்கள் வீட்டில் வழிபாடு செய்துவிட்டு, புத்தாடைகள் அணிந்து, பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். குழந்தைகள் பெரியவர்களின் காலில் விழுந்து வாழ்த்து பெற்றனர்.

சென்னை வடபழனி முருகன் கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள்  குடும்பத்துடன் வந்து வழிபாடு மேற்கொண்டனர். முருகப்பெருமானுக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. சுவாமி தரிசனம் செய்த பக்ர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 

சென்னையின் பல்வேறு பகுதிகளில் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீட்டு வாசலில் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow