விஜய் சார் முதல்வராவார்...கல்விக்கு மிக முக்கியத்துவம் கொடுப்பார்.. நாங்குநேரி சின்னத்துரை நம்பிக்கை

2026 ஆம் ஆண்டில் விஜய் சார் முதல்வராவார் என்ற நம்பிக்கை இருக்கு. அவர் முதலமைச்சர் ஆன பிறகு கல்விக்கு மிக முக்கியத்துவம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கிறேன் என்று நாங்குநேரி சின்னத்துரை கூறியுள்ளார்.

Jun 28, 2024 - 15:22
விஜய் சார் முதல்வராவார்...கல்விக்கு மிக முக்கியத்துவம் கொடுப்பார்.. நாங்குநேரி சின்னத்துரை நம்பிக்கை

தமிழகத்தில் நடந்து முடிந்த 10ஆம், 12ஆம் வகுப்பு மாணவர்களை சந்திக்கும் நிகழ்ச்சிக்குச் சென்ற நடிகர் விஜய், மாணவர்களின் உற்சாக வரவேற்பை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து மேடையில் இருந்து இறங்கிய அவர், நேராக நாங்குநேரியில் சாதி வெறியர்களால் தாக்கப்பட்ட மாணவர் சின்னத்துரையின் அருகே அமர்ந்தார். இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது

நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் கல்வி விருது விழாவில் கலந்துகொண்ட நிலையில் நெல்லை மாவட்டத்தில் சாதிய கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னதுரை அருகே அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு வைர மோதிரம், வைர கம்மல் ஆகியவை வழங்கிய நடிகர் விஜய்,  அவர்களை குடும்பமாக வரவழைத்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.  

 நடிகரும், தவெக தலைவருமான விஜய்யிடம் பரிசு பெற்ற நாங்குநேரி மாணவன் சின்னத்துரை , விஜய் சாரை  நேர்ல பார்த்தது ரொம்ப மகிழ்ச்சி.  அவர்  பக்கத்துல வந்து உட்கார்ந்து இருந்தார்.  இவ்வளவு பெரிய ஆள் நம் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கிறார் என்பதை எனக்கு பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. 2026ல்  விஜய் சார் முதல்வராவார் என்ற நம்பிக்கை இருக்கு.  அவர் முதலமைச்சர் ஆன பிறகு கல்விக்கு மிக முக்கியத்துவம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த முனியாண்டி அம்பிகாபதி தம்பதியரின் மகனான சின்னதுரை அங்குள்ள அரசு பள்ளியில் கடந்த ஆண்டு +2 படித்து வந்தார். பள்ளி மாணவர்களுக்கிடையே சாதிவெறி ஊறிப் போய் இருந்த நிலையில் அவர் ஒரு வாரம் பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதை அடுத்து அவரது பெற்றோரை தொடர்பு கொண்ட பள்ளி நிர்வாகத்தினர் மாணவனை பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளனர்.

அதனை தொடர்ந்து பள்ளிக்குச் சென்ற சின்னதுரையிடம் ஆசிரியர்கள் விசாரணை நடத்திய போது பள்ளி மாணவர்கள் சிலர் தன்னை சாதி ரீதியாக தாக்குவதாக கூறியுள்ளார். மேலும் குறிப்பிட்ட மாணவர்களின் விவரங்களையும் அவர் ஆசிரியர்களிடம் கூறியிருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவர்கள் ஏன் தங்களை பற்றி ஆசிரியர்களிடம் சொன்னாய் என மிரட்டியதோடு பள்ளி முடிந்த பின்பும் தாக்கியுள்ளனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீட்டிற்குச் சென்ற அவர்கள் சின்ன துரையை வீடு புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். அதை தடுக்க முயன்ற சின்னத்துரையின் தங்கைக்கும் அரிவாள் விட்டு விழுந்தது. 

ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர்களை அருகில் இருந்தோர் மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தினர். இந்த சம்பவத்தை கேட்டு சின்ன துரையின் தாத்தா கிருஷ்ணனும் மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழ்நாடு பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தன. இந்த நிலையில் கைகள் வெட்டப்பட்டு தேர்வு எழுத முடியாமல் சிரமப்பட்டு வந்த சின்னத்திரை பிறர் உதவியோடு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு எழுதினார். இந்த நிலையில் நடந்து முடிந்த பிளஸ் டூ பொதுத்தேர்வையும் அவர் எழுதியிருக்கும் நிலையில் தேர்வு முடிவுகள் வெளியானது.

மாணவன் சின்னத்துரை மொத்தம் 469 மதிப்பெண்கள் பெற்று தேர்வில் வெற்றி பெற்று இருந்தார் சின்னதுரை. காயம் காரணமாக படிக்க முடியாமல் போனதால் அவரது மதிப்பெண் குறைந்திருக்கிறது இல்லாவிட்டால் இன்னும் அதிக மதிப்பெண்களை சின்னத்துரை பெற்றிருப்பார் என அவரது நண்பர்கள் கூறினார். பிகாம் முடித்து விட்டு சிஏ படிக்க வேண்டும் என்று விரும்புகிறார் சின்னத்துரை.முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டி பரிசளித்தார். அப்போது சின்னத்துரை, என்னை தாக்கியவர்களும் நன்றாக படித்து மேலே வரவேண்டும் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று சொன்னார். இந்த நிலையில் விஜய் அவரை நேரில் வரவழைத்து பரிசளித்து பாராட்டியுள்ளார் விஜய்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow