”தீபாவளி வாழ்த்து சொல்லமாட்டோம்னு இருந்தாங்க..ஆனா இப்போ...”

தீபாவளிக்கு இது வரை வாய்திறக்காதவர்களும் இப்போது வாய் திறந்து  வாழ்த்து சொல்லி இருக்கிறோர் இதுவே எங்களுக்கு வெற்றி தான் என தெரிவித்துள்ளார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

Oct 31, 2024 - 11:50
Oct 31, 2024 - 12:39
”தீபாவளி வாழ்த்து சொல்லமாட்டோம்னு இருந்தாங்க..ஆனா இப்போ...”

தீபாவளிக்கு இது வரை வாய்திறக்காதவர்களும் இப்போது வாய் திறந்து  வாழ்த்து சொல்லி இருக்கிறோர் இதுவே எங்களுக்கு வெற்றி தான் என தெரிவித்துள்ளார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் புத்தாடை உடுத்தி, இனிப்புகளை வழங்கி, பட்டாசு வெடித்து தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள  இல்லத்தில் பட்டாசு வெடித்து மக்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் இனிப்புகள் வழங்கி  தீபாவளி பண்டிகை கொண்டாடினார்  மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசியதாவது, "உலகம் முழுவதும் இருக்கும் தமிழக மக்கள் சகோதர சகோதரிகள் என  அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் எனவும் இந்த தீபாவளி இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுக்க கூடியது எனவும் தெரிவித்தார். 

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்ட பிறகு முதல் தீபாவளியாக இந்த தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. நல்ல விசயங்களை எடுத்து கொண்டு தீய விசயங்களை ஒழிக்க வேண்டும்.நாட்டின் வளச்சிக்கு நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்.

திமுக என்கின்ற நரகாசுரனை 2026ல் ஒழித்த பிறகு தீபாவளி பண்டிகையை மிக சிறப்பாக கொண்டாடுவோம். தீபாவளிக்கு வாழ்த்து சொல்லவே மாட்டோம் என இருந்தவர்கள் தற்போது நம்புகிறவர்களுக்காவது எதோ வாயை திறந்து வாழ்த்தி இருக்கிறார்கள் என துணை முதலவர் குறித்தான கேள்விக்கு பதிலளித்தார்.

விஜய் கூட தீபாவளிக்கு வாழ்த்து சொல்லி இருக்கிறார். அவருக்கும் வாழ்த்துக்கள் என கூறினார்.தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதில் என்ன தயக்கம் உள்ளது. அனைத்து திருவிழாக்களுக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும். அனைவருக்கும் பொதுவான முதலமைச்சர் ஏன் வாழ்த்து சொல்வதில்லை எனவும் அவரும் வாழ்த்து சொல்லுவார் என்று எதிர்பார்கிறோம்” என தெரிவித்தார்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow