தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன், குரங்கம்மை பாதிப்பு, தமிழக அரசு, திமுக, மருத்துவத்துறை, minister m. subramanian, monkeypox, government of tamil nadu, dmk, medical department இதுவரையில் தமிழகத்தில் எந்த விதமான பெரிய அளவிலான பட்டாசுகள் தொடர்பான விபத்துகளும் ஏற்படவில்லை.
தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் மணி விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ சென்னை, மதுரை, கோவை போன்ற பன்னாட்டு விமான நிலையங்களில் வெளி நாடுகளிலிருந்து வரும் நபர்களை பரிசோதனை செய்யும் நடைமுறை நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து விமான நிலையாங்களிலும் ஒரு தனிமை அறை அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் குரங்கம்மை நோயாளிகளுக்கான 10 வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.
27 வயதுள்ள இளைஞர் நேற்றைய முன் தினம் சார்ஜா நாட்டிலிருந்து கோவை விமான நிலையம் மூலமாக தமிழகம் வந்தடைந்தார். அவர் பரிசோதனையில் ஈடு படுத்தியபொழுது அவருக்கு குரங்கம்மை நோயில் இருக்கும் கொப்பளங்கள் கடன்றியபட்டது. அவர் பதட்டப்பட்டு பரிசோதனை செய்யாமல் தப்பி சென்றார். அதனைத்தொடர்ந்து அவரை கண்டறிந்து மேலும் பரிசோதித்தபொழுது அவருக்கு 27 இடங்களில் கொப்பளங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டது. ஆனால் அவருக்கு குரங்கம்மை தொற்று இல்லை எனவும் சிக்கன் பாக்ஸ் தொற்று மட்டுமே உள்ளது என கண்டறியப்பட்டது. மேலும் மருத்துவப்பரிசோதனைக்கு புனே தேசிய வைரலாஜி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நபர் திருச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார் .
இதுவரையில் தமிழகத்தில் எந்த விதமான பெரிய அளவிலான பட்டாசுகள் தொடர்பான விபத்துகளும் ஏற்படவில்லை. மேலும், வடகிழக்கு பருவ மழை அதிவேகத்துடன் தொடங்கியது. ஒரு வருடத்திற்கான மழை கணகெடுக்கப்பட்டுள்ளது. 20 செ.மீ மேலாக மழை சென்னையில் மட்டும் சமீபத்தில் பதிவாகப்பட்டுள்ளது. ஆனால் எந்தவிதமான சேதமும் இன்றி முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
What's Your Reaction?