மயிலாப்பூரில் விமான சாகசத்தை வேடிக்கை பார்த்த போது நேர்ந்த அசம்பாவிதம்..

சென்னை மயிலாப்பூரில் விமான சாகச ஒத்திகையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த போது,  வீட்டின் பால்கனி இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Sep 28, 2024 - 19:28
மயிலாப்பூரில் விமான சாகசத்தை வேடிக்கை பார்த்த போது நேர்ந்த அசம்பாவிதம்..

சென்னை மயிலாப்பூரில் விமான சாகச ஒத்திகையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த போது,  வீட்டின் பால்கனி இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

1932 ஆண்டு அக்டோபர் 8ம் தேதி நிறுவப்பட்ட இந்திய விமானப்படை, வருடந்தோறும் அக்டோபர் 8ல் விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்திய விமானப்படை 92-வது ஆண்டு நிறைவு  விழாவை ஒட்டி செப்டம்பர் 6ஆம் தேதி காலை 11 மணி முதல் சென்னை மெரினா கடற்கரையில் வான்வழி விமான சாகம் நடைபெற உள்ளது.

இதில் அனைத்து வகையான போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், சாரங் மற்றும் சூரியகிரண் வான்சாகச குழு உட்பட 72 வான்சாகச குழுக்கள் பங்கேற்கின்றன. இந்த நிகழ்ச்சியை காண பொதுமக்களுக்கு இலவசம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியை காண அனைவரையும் வரவேற்று defence PRO எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் மீண்டும் விமான சாகச நிகழ்ச்சி 23 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறவுள்ளது.

தாம்பரம் விமானப்படைத் தளத்திலிருந்து புறப்படும் விமானங்கள், கோவளத்திலிருந்து சென்னை மெரினாவரை கடற்கரையை அலங்கரித்தவாறு பறக்க உள்ளது என விமானப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வரும் 6ம் தேதி மெரினா கடற்கரையில் நடைபெறும் விமான சாகசத்தை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 

அக்டோபர் 2ம் தேதி முதல் 5ம் தேதிவரை விமான சாகச நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகையும் நடைபெற்று வருகிறது. அதனையொட்டி விமான படையின் ஒத்திகை மெரினா கடற்கரையில் நடைபெற்றது. இதனால் மெரினா கடற்கரையையொட்டி இருக்கக்கூடிய மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், ஐஸ் ஹவுஸ் போன்ற பகுதிகளில் விமானங்களின் சாகச ஒத்திகையால் பயங்கர சத்தம் ஏற்பட்டது.

அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களின் வீடுகளின் மாடிகளில் நின்று வேடிக்கை இதை பார்த்தனர். அதேபோல், மயிலாப்பூர் மீனாம்பாள் புரத்தைச் சேர்ந்த வெண்ணிலா என்பவரின் வீட்டில் அவர்களது குடும்பத்தினர் 5 பேர் பால்கனியில் நின்று வேடிக்கை பார்த்த போது, பாரம் தாங்காமல் திடீரென இடிந்து விழுந்தது. தகவலறிந்து சென்ற காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow