லப்பர் பந்து படத்தை பாரட்டிய ஹர்பஜன் சிங்

கிரிகெட்டை மையப்படுத்திய திரைப்படமான ‘லப்பர் பந்து’ படத்தை இந்திய முன்னாள் கிரிகெட் வீரர் ஹர்பஜன் சிங் பாராட்டி ட்வீட் செய்திருக்கிறார். 

லப்பர் பந்து படத்தை பாரட்டிய ஹர்பஜன் சிங்
harbajan singh

அட்டக்கத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடந்த செப்டம்பர் 20ம் தேதி வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கிரிகெட்டை மையப்படுத்திய அத்திரைப்படத்தின் திரைக்கதை மிகுந்த சுவாரச்யத்தோடு அமைக்கப்பட்டிருப்பதும், அனைவரும் விரும்பும்படியான ஃபீல் குட் படமாக அமைந்துள்ளதால் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. 

சமீபத்தில் வெளிவந்த திரைப்படங்களிலேயே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் படம் லப்பர் பந்து தான். இத்திரைப்படத்தினை அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கியிருக்கிறார். பட்டிதொட்டியெங்கும் கிரிகெட் ரசிகர்கள் இருக்கிறார். இத்திரைப்படம் கிரிகெட்டை விரும்புகிற அனைவருக்கும் பிடித்தமானபடி இருப்பதால் மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இப்படத்தைப் பார்த்த இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் படக்குழுவினருக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்திருந்தார். அவரை அடுத்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது பாராட்டுகளைத் தெரிவிக்கும் விதமாக தனது எக்ஸ் தளத்தில் தமிழில் பதிவிட்டிருக்கிறார்.

என்னோட அடுத்த தமிழ் பட Direction டீம் சொன்னாங்க "சார் #lubberPandhu னு ஒரு படம் வந்துருக்கு., கிராமத்து கிரிக்கெட் சப்ஜெக்ட் சும்மா அட்டகாசமா இருக்கு பாருங்கனு". கிரிக்கெட் மேல நீங்க வெச்ச காதல் ஜெயிச்சிருச்சு மாறா” என்று பதிவிட்டிருக்கிறார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow