நடுக்கடலில் சிக்கி தவித்த மீனவர்கள்.. உதவிக்கரம் கொடுத்த கடலோர காவல் படையினர்..

ஆந்திராவில் நடுக்கடலில் சிக்கி தவித்த 10 மீனவர்களில் 8 பேரை உயிருடனும் ஒருவரை சடலமாகவும் கடலோர காவல் படையினர் மீட்டுள்ளனர். 

Apr 5, 2024 - 07:26
நடுக்கடலில் சிக்கி தவித்த மீனவர்கள்.. உதவிக்கரம் கொடுத்த கடலோர காவல் படையினர்..

சென்னை புதுவண்ணாரப்பேட்டை திடீர் நகரை சேர்ந்த அய்யனாரப்பன் என்பவருக்கு சொந்தமான படகில் சென்னை மற்றும் நெல்லூரை சேர்ந்த மீனவர்கள் 10 பேர் கடந்த 27ஆம் தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். கடந்த 3-ஆம் தேதி மாலை ஆந்திரா அருகே நடுக்கடலில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகில்  நீர் கசிவு ஏற்பட்டதால் ஏஐஎஸ் (ஆட்டோமேட்டிக் ஐடன்டிப்பிக்கேஷன் சிஸ்டம்) கருவி மூலம் இந்திய கடலோர பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து இந்திய கடலோர படையினர் உடனே அருகில் உள்ள துறைமுகங்களுக்கு மின்னஞ்சல் மூலமாக பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உதவி வழங்குமாறு தகவல்கள் தெரிவித்தனர். படகில் உள்ள நீரை வெளியேற்று பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர்.

பின்னர் நடுக்கடலில் சிக்கித் தவித்த நெல்லூர் மற்றும் சென்னையை சேர்ந்த 8 மீனவர்களை இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டனர். பின்னர் கடலோர காவல்படையின் சி-440 கப்பல் மூலம் மீட்கப்பட்ட மீனவர்கள் சென்னை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

அருண்குமார் என்ற மீனவர் கடலில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அவரது உடலை மீட்டு சென்னைக்கு கொண்டு வந்துடன் மீட்கப்பட்ட மற்ற மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் காணாமல் போன மீனவர் சுப்புராஜ் தேடும் பணி ஈடுபட்டு வருவதாக இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow