அ.தி.மு.க.–தி.மு.க. ஆட்சிகளில் ரூ.300 கோடி டெண்டர் ஊழலா? விசாரணை கோரும் விவசாயிகள்

நெல் போக்குவரத்து டெண்டரில் ரூ.300 கோடி ஊழல் நடந்ததாக டெல்டா விவசாயிகள் குற்றம்சாட்டி, முழுமையான விசாரணைக்கு கோரியுள்ளனர்.

அ.தி.மு.க.–தி.மு.க. ஆட்சிகளில் ரூ.300 கோடி டெண்டர் ஊழலா? விசாரணை கோரும் விவசாயிகள்

த.வெ.க. ஆட்சியில் கடந்தகால ஊழல்களுக்கு எதிராக போடப்படும் புகைமூட்டத்தால் ஊழல் பெருச்சாளிகள் ஒவ்வொன்றாக வெளியே வந்துகொண்டிருக்கின்றன. அப்படித்தான் கடந்த அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆட்சி காலங்களில் நெல் மூட்டைகளை ஏற்றி இறக்கும் பணிக்கான வாடகை லாரி டெண்டரில் 300 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் அரங்கேறியிருப்பதாக கூறி அதிரவைக்கின்றனர் டெல்டா மாவட்ட விவசாயிகள்!

இதுகுறித்து ஐ.என்.டி.யூ.சி. மாநில பொதுச்செயலாளர் இளவரியிடம் பேசினோம். நெல் மூட்டைகளை ஏற்றி ரயில்வே வேகன்களுக்கு கொண்டுசெல்வது உள்ளிட்ட பணிகளுக்கான போக்குவரத்து ஒப்பந்தம் 1974ம் ஆண்டு முதல் அமலில் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் அந்தந்த மண்டல நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளர்களே முடிவு செய்து டெண்டர் விடுவார்கள். குறைவான மதிப்பீடு கோரியவர்களுக்கு டெண்டர் வழங்குவார்கள். பின்னர் இந்த நடைமுறை மாறி வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் மூலம் டெண்டர் இறுதி செய்யப்பட்டது. அப்போதிருந்துதான் இந்த வாழல்கள் தொடங்கின.

2020ம் ஆண்டு ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள். குறிப்பாக, ஒரு பெண் ஐ.ஏ.எஸ். ஆபீஸரின் தவறான வழிகாட்டுதலால் 60 பேர் செய்துவந்த ஒப்பந்தப் பணிகளை ஆர்னிகா எண்டர்பிரைசஸ், சிங்க் ஃபுட்ஸ் என இரண்டு நிறுவனங்களிடம் மட்டும் ஒப்படைத்தனர். டெண்டர் விடவேண்டுமென்றால் ஒரு மாவட்டத்திற்கு 15 லாரிகள் மற்றும் 150 ஊழியர்கள் இருக்க வேண்டும். இதுதான் டெண்டர் விதிமுறை. ஆனால், 2020ம் ஆண்டு டெண்டர் விடப்பட்ட இரு நிறுவனங்களிடம் ஒரு லாரிகூட இல்லை. ஊழியர்களும் இல்லை. 

இந்த இரண்டு நிறுவனங்களும் கிறிஸ்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குமாரசாமி என்பவருக்குச் சொந்தமானது. இந்த கிறிஸ்டி நிறுவனம் கர்நாடக மாநில அரசால் கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தது. எடப்பாடி முதல்வராக இருந்த காலத்தில் இப்படி தவறான முன்னுதாரணத்தை அறிமுகப்படுத்தினார்கள்.
பின்னர் ஆண்டுக்கு ஒருமுறை டெண்டர் விடும் முறையை மாற்றி ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை அதாவது 2020 முதல் 2024 வரை என மாற்றினார்கள்.

இது மிகப்பெரிய தவறு. ஆண்டுக்கு ஒரு முறை டெண்டரை மாற்றும்போது டெண்டர் உயர்வு தொகை 8 சதவிகிதம்தான் இருக்கும். யாருக்கும் 8 சதவிகிதத்திற்கு மேல் கொடுத்ததே இல்லை. ஆனால், இந்த விதி மீறப்பட்டு மேற்கண்ட நிறுவனத்திற்கு 30 சதவிகித உயர்வு, அதுவும் ஐந்தாண்டுகளுக்கு வழங்கப்பட்டது. இதனால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு 300 கோடி ரூபாய் அளவில் இழப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து அப்போதைய நிர்வாக இயக்குநர் வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் மேற்கொண்டனர். அதன்பிறகு அந்த விவகாரம் என்ன ஒருஆனது என்றே தெரியவில்லை. குற்றச் இந்ந நிலையில் 2021ல் திமுக ஆட்சிக்கு வந்ததும் மேற்கண்ட ஊழல் குறித்த முறையீட்டினை எங்கள் சங்கம் சார்பில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியிடம் அளித்தோம். அதன்பேரில் கூட்டுறவு மற்றும் உணவு வழங்கல் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், நிர்வாக இயக்குநர் பிரபாகர் ஆகியோர் தலைமையில் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். எங்கள் எதிர்ப்பை கருத்தில் கொண்டு ஐந்தாண்டுக்கு ஒருமுறை டெண்டர் கோரும் நடைமுறை 20.02.23 அன்று ரத்து செய்யப்பட்டது.

இதனால் கழகத்திற்கு ஏற்பட இருந்த 150 கோடி ரூபாய் நஷ்டம் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து தி.மு.க. அரசு மறு டெண்டர் விடுவதில் காலம் தாழ்த்தி 2024ல் டெண்டர் இறுதி செய்யப்பட்டது. அதுவும் அதே கிறிஸ்டி நிறுவனத்திற்கு ஐந்து வருடத்திற்கான டெண்டராக கொடுக்கப்பட்டதை அறிந்து அதிர்ந்துபோனோம். எஸ்.ஓ.ஆர் (ஷெட்யூல்டு ஆஃப் ரேட்)க்கு முரண்பாடாக 38 சதவிகிதம் கூடுதலாக போக்குவரத்துத் தொகை நிர்ணயம் செய்து டெண்டர் விடப்பட்டுள்ளதால் கழகத்திற்கு மீண்டும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெக அரசு எங்கள் முறையீட்டினை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்வதோடு டெண்டரை ரத்து செய்து மறுடெண்டர் விட வேண்டும். அத்துடன் இனிவரும் காலங்களில் டெண்டரில் எவ்வித முறைகேடும் நடைபெறாத வகையில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தை காப்பாற்ற வேண்டும்" என்றார்.

இதுகுறித்து விளக்கம் பெற உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணனை பலமுறை தொடர்புகொண்டும் நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை. இதுகுறித்துப் பேசிய திருவாரூர் நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் சரவணன், "திருவாரூர் மாவட்டத்தில் நெல் தேக்கம் எதுவும் இல்லை. டெல்டாவில் மொத்த இருப்பில் உள்ள நெல் மூட்டைகள் குறித்து அவர்கள் கூறியிருக்கலாம். இங்கு இருப்பில் உள்ள நெல் மூட்டைகளை மொத்தமுள்ள 24 அரவை மில்களுக்கு மாதம் 68 ஆயிரம் டன் வீதம் அரவைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இப்போது 2 லட்சத்து 46 டன் இருப்பு உள்ளது. ஒவ்வொரு மாதமும் 15 ஆயிரம் டன் நெல் தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர் ஆகிய மாவட்டங்களுக்கு அரவைக்காக ரயில் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. இப்போது
இருப்பில் உள்ள நெல் 4 மாத செய்யப்பட்டுவிடும்" என்றார்.ஊழல் செய்தவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்படுமா, ஊழல்வாதிகள் தண்டிக்கப்படுவார்களா?

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow