“வாங்கண்ணா வணக்கங்கண்ணா... முதலமைச்சர் ஆக்குறோம்ணா..” அக்கா பாட்டு... விஜய் கொடுத்த ரியாக்ஷன்!

மாணவர்களுக்கான கல்வி விருது வழங்கும் விழாவில், பெண் ஒருவர் விஜய்யை முதலமைச்சர் ஆக்குறோம் என பாடிய பாடல் இணையத்தை கலக்கி வருகிறது.

Jun 28, 2024 - 12:34
“வாங்கண்ணா வணக்கங்கண்ணா... முதலமைச்சர் ஆக்குறோம்ணா..” அக்கா பாட்டு... விஜய் கொடுத்த ரியாக்ஷன்!

சென்னை: 2026 தேர்தலில் நேரடியாக களமிறங்குகிறார் நடிகர் விஜய். இதற்காக தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சித் தொடங்கியுள்ள விஜய், அடுத்தடுத்து அதிரடி காட்டி வருகிறார். இந்நிலையில், தவெக சார்பில் மாணவர்களுக்கான கல்வி விருது, ஊக்கத் தொகை வழங்கும் விழா இன்று சென்னை நடைபெறுகிறது. கடந்தாண்டு ஒரேநாளில் நடைபெற்ற இவ்விழாவை இந்தமுறை இரண்டு கட்டங்களாக நடத்துகின்றனர். அதன்படி தற்போது சென்னை திருவான்மியூரில் நடைபெறும் விருது விழாவில், 800 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர். அவர்கள் முன் சில நிமிடங்கள் உரையாற்றிய விஜய், அதனைத் தொடர்ந்து விருதுகளையும் ஊக்கத் தொகையையும் வழங்கினார்.    

அப்போது நடந்த சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது மாணவரின் அம்மா, விஜய்க்காக ஒரு பாடலை பாட வேண்டும் எனக் கூறி மைக்கை கையில் எடுத்தார். தலைவா படத்தில் இடம்பெற்ற ‘வாங்கண்ணா வணக்கங்கணா’ பாடலின் லிரிக்ஸை மாற்றிய அவர், விஜய்யை முதலமைச்சர் ஆக்குறோம் என பாடி அங்கிருந்தவர்களுக்கு வைப் கொடுத்தார். அதாவது, “வாங்கண்ணா வணக்கங்கண்ணா மை சாங்க நீ கேளுங்கண்ணா... நா உளறல உளறலண்ணா... It’s my feeling feeling-ணா... கட்சியில சேரணும்ன்னு வீட்ல சொன்னேங்ணா... விடலைங்க விடலைங்கண்ணா... விடவே இல்லைங்கண்ணா... தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அண்ணா கட்சின்னு சொன்னேங்கணா... ஓகே ஓகேன்னு சொன்னாங்கண்ணா... மகளிரணி, மாணவரணி, கட்சின்னு வந்தாங்கண்ணா... ஊதுறோம் ஊதுறோம் ஊதுறோம்ண்ணா... எல்லா கட்சியையும் ஊதுறோம்ண்ணா... உங்களா நாங்க முதலமைச்சரா ஆக்குறோம்ண்ணா... ஆக்குறோம் ஆக்குறோம்ண்ணா, உங்கள முதலமைச்சரா ஆக்குறோம்ண்ணா... தமிழக வெற்றிக் கழக தலைவர் உங்களண்ணா... தளபதி விஜய்ண்ணா உங்கள முதலமைச்சரா ஆக்குறோம்ண்ணா..” என வைப் கொடுத்து பாடினார்.

கடைசியாக Thanks-ண்ணா Thanks-ண்ணா... இந்த சான்ஸ்க்கு Thanks-ண்ணா என நன்றி கூறி மேடையில் இருந்து இறங்கினார். அக்காவின் பாடலை கேட்டபடி சைலண்டாக நின்று கொண்டிருந்த விஜய், எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் கிரேட் எஸ்கேப் ஆனார். இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் ஒருபக்கமும், அவருக்கு எதிராக ட்ரோல் செய்யும் விதமாக நெட்டிசன்கள் இன்னொரு பக்கமும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இவங்கள நம்பிதான் அரசியலுக்கு வரப் போறீங்களா விஜய்ண்ணா எனவும் கேள்வி கேட்டுள்ளனர். நெட்டிசன்களில் சிலர், மாணவர்களுக்கு உதவி செய்கிறோம் என்ற பெயரில் காமெடி ஷோ நடத்திட்டு இருக்காறே விஜய்ண்ணா என கலாய்த்து வருகின்றனர். 

அதேநேரம் அந்த அக்கா பாடியது ஒருநாள் உண்மையாகும் எனவும், விஜய் கண்டிப்பாக முதலமைச்சராக பதவியேற்பார் என்றும் பாசிட்டிவாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். இன்றைய நிகழ்ச்சியில் போதை பழக்கம் குறித்து பேசிய விஜய், இந்த பிரச்சினையில் ஆளும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாக குறிப்பிட்டிருந்தார். இதுவும் அரசியல் வட்டாரத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow