TNPSC தேர்வு - ஆண்டு அட்டவணை வெளியீடு

குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகளுக்கான தேர்வு அடுத்த ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும்.

Oct 10, 2024 - 14:42
TNPSC தேர்வு - ஆண்டு அட்டவணை வெளியீடு

குரூப் -1 தேர்வு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி ஆண்டு அட்டவணையை வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்த டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆண்டு அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதில், குரூப் 1 தேர்வு அடுத்த ஆண்டு ஜூன் 15ஆம் தேதி நடைபெறும். தேர்வு குறித்த அறிவிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், குரூப் 4 தேர்வு அடுத்தாண்டு ஜூலை 13ஆம் தேதி நடைபெறும் எனவும், ஏப்ரல் 25ஆம் தேதி தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகளுக்கான தேர்வு அடுத்த ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும். தேர்வு குறித்த அறிவிப்பு ஜூலை 15ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக நேற்று குரூப்4 தேர்வு பணியிடங்களுக்கு கூடுதலாக 2208 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குரூப் 4 தேர்வுக்கான பணியிடம் மொத்தம் 8,932 பணியிடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow