தேர்தல் ஆணையத்தின் களப்பணி சரியில்லை... அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு...
கோவையில் பாஜக ஆதரவு வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் ஆணையத்தின் களப்பணி சரியாக இல்லை எனவும் அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக வேட்பாளரும், பாஜக மாநிலத் தலைவருமான அண்ணாமலை, கோவை மக்களவைத் தொகுதியில் வெளிநாடுகளில் இருந்து வாக்களிக்க வந்தவர்களின் பெயர்கள் பட்டியலில் இல்லை என்று கூறினார். ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், ஒரு வீட்டில் இறந்த கணவரின் பெயர் பட்டியலில் உள்ளது. ஆனால் மனைவி பெயர் இல்லை என்று தெரிவித்தார்.
பாஜக ஆதரவு வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டிய அண்ணாமலை, வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத பகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டுமென்று வலியுறுத்தினார்.
வாக்காளர் பட்டியலில் ஏராளமானோரின் பெயர்கள் இல்லாததன் காரணமாக, வாக்குவாத சம்பவங்கள் அரங்கேறியதாக கூறிய அண்ணாமலை, கோவை மக்களவைத் தொகுதியில் தேர்தல் ஆணையத்தின் களப்பணி சரியாக இல்லை என சாடினார்.
What's Your Reaction?