மாநிலக் கல்லூரி மாணவர் கொலை - பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேர் அதிரடி நீக்கம்
5 பேரும் பெரியமேடு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மாநிலக் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேரை நீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னையில் ரூட் தல விவகாரத்தில், மாநிலக் கல்லூரி மாணவர்கள் பச்சையப்பன் கல்லூரிகள் அடிக்கடி மோதிக்கொள்வது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த 4ம் தேதி சென்னை சென்ட்ரல் நிலையம் அருகே மாநிலக்கல்லூரி மாணவர்கள் மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் மாநிலக்கல்லூரி மாணவர் சுந்தரை பலர் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த சுந்தரை அருகாமையில் இருந்த பொதுமக்கள் மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் 6 நாட்கள் பிறகு சுந்தர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விவாகரத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களது மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சுந்தர் மரணமடைந்ததை தொடர்ந்து இரு கல்லூரிகளிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மாநிலக்கல்லூரிக்கு வரும் திங்கட்கிழமை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாநிலக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஐடி கார்டு போட்டு சென்றாலே தங்களை தாக்குவதாக போலீசார் மற்றும் பேராசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், காவல்துறையினர் சமர்பித்த அறிக்கையின் படி மாநிலக்கல்லூரி மாணவர் சுந்தர் கொலை வழக்கில் கைதான பச்சையப்பன் கல்லூரி மாணவர்களான பிஏ வரலாறு 3ஆம் ஆண்டு படித்த சந்துரு, பிஏ தமிழ் 2ஆம் ஆண்டு படித்த யுவராஜ், பிஏ வரலாறு படித்த ஈஸ்வர், பிஏ பொருளாதாரம் 2ஆம் ஆண்டு படித்த ஹரி பிரசாத் என்ற புஜ்ஜி, பிஏ பொருளாதாரம் 2ஆம் ஆண்டு படித்த கமலேஸ்வரன் ஆகிய 5 பேர் கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்து பச்சையப்பன் கல்லூரி நிர்வாகம் உத்தரவிடப்பட்டுள்ளது.
What's Your Reaction?