தீபாவளி - சொந்த ஊர்களுக்கு செல்ல படையெடுத்த மக்கள்
தீபாவளி பண்டிகை கொண்டாட சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு செல்ல கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் குவிந்த மக்கள், சிறப்பு பேருந்துகளில் முண்டியடித்து ஏறி பயணம் செய்தனர்.
தீபாவளி பண்டிகை கொண்டாட சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு செல்ல கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் குவிந்த மக்கள், சிறப்பு பேருந்துகளில் முண்டியடித்து ஏறி பயணம் செய்தனர்.
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையில் தங்கி பணிபுரிந்து வரும் வெளியூர்வாசிகள், தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக தங்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
இன்று பேருந்துகள், ரயில்களில் மிகவும் அதிகமான கூட்டம் இருக்கும் என்பதால், நேற்று மாலையில் இருந்தே ஏராளமான மக்கள் சொந்த ஊருக்கு புறப்பட தொடங்கிவிட்டனர். இதன் காரணமாக சென்னையை அடுத்த தாம்பரம், பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் குவிந்த அதிக அளவிலான பயணிகள் சிறப்பு பேருந்துகளில் முண்டியடித்து ஏறி பயணம் செய்தனர்.
இதனிடையே பேருந்து முனையத்தில் நெட்வொர்க் பிரச்னை காரணமாக இணைய சேவை பாதிக்கப்பட்டதால், பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாமல் மக்கள் அவதியடைந்தனர். அதே சமயம் பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏ.டி.எம். இயந்திரங்களில், சில ஏ.டி.எம்.கள் மட்டுமே வேலை செய்ததால் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து பணத்தை எடுத்துச் சென்றனர்.
இந்நிலையில், பேருந்து நிலைய நடைமேடையில் இருந்து முறையாக பேருந்துகள் இயக்கப்பட வில்லை எனவும், நடைமேடை மாற்றம் செய்தது குறித்து அதிகாரிகள் கூறவில்லை எனவும் பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
What's Your Reaction?