ஆம்ஸ்ட்ராங் கொலை; நாகேந்திரன் வாக்குமூலம் வெளியீடு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் குற்றப்பத்திரிகையில் நாகேந்திரன் அளித்த வாக்குமூலம் வெளியாகியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் குற்றப்பத்திரிகையில் நாகேந்திரன் அளித்த வாக்குமூலம் வெளியாகியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் அருகே, கடந்த ஜூலை 5ம் தேதி கொடூரமாக கொல்லப்பட்டார். இந்நிலையில் வழக்கின் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள நாகேந்திரன் அளித்த வாக்குமூலம் வெளியாகியுள்ளது.
ஐஓசி காண்ட்ராக்டர் ஜெயப்பிரகாஷை துப்பாக்கியை காட்டி மிரட்டிய விவகாரத்தில் தனது மகன் அஸ்வத்தாமன் கைதாக ஆம்ஸ்ட்ராங்தான் காரணம் என்பதால் நாகேந்திரன் ஆத்திரத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அஸ்வத்தாமன் அரசியலில் மேலே வராமல் இருக்க ஆம்ஸ்ட்ராங்கே காரணம் என்பதால், அவரை நேரில் மிரட்டி எச்சரித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி தனது மகன் அஸ்வத்தாமன் அதன்படி கொலை திட்டம் குறித்து வழக்கறிஞர் அருள் தனது மகன் அஸ்வத்தாமனிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய ஆற்காடு சுரேஷ்-ஐ பயன்படுத்திக் கொண்டதாகவும் கொலைக்கான செலவை பார்த்துக் கொள்ள ஒப்புக் கொண்டதாகவும் நாகேந்திரன் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
What's Your Reaction?